ரஷ்யாவில் படப்பிடிப்பு முடிந்தது...சென்னை திரும்பிய கோப்ரா டீம்
சென்னை : டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இதன் படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யாவில் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்த கோப்ரா படக்குழு, சென்னை திரும்பி உள்ளது.
ஸ்பை - த்ரில்லர் படமான இதில் விக்ரம் பல்வேறு தோற்றங்களில் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரஷ்யாவில் எடுக்கப்பட வேண்டிய படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்த அதீத குளிரை சமாளித்து, தாங்கள் எவ்வாறு படப்பிடிப்பை நடத்தினோம் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார். கடும் குளிரிலும் விடாமல் படப்பிடிப்பை நடத்தியதாக அவர் கூறி உள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கோடையில் இப்படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரில், கணிதவியல் நிபுணராக விக்ரம் அதை பயன்படுத்தி எவ்வாறு குற்றங்கள் செய்கிறார் என்பதை காட்டி இருந்தனர்.
Recommended Video
இந்த படத்தில் முதல் முறையாக கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார். இந்த படத்தில் துருக்கி இன்டர்போல் ஆபீசராக இர்ஃபான் பதான் நடித்தள்ளதாக காட்டி இருந்தனர்.


Click it and Unblock the Notifications











