twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமின் 'கோப்ரா'வுக்காக சென்னையில் உருவாகும் ரஷ்யா.. விரைவில் தொடங்குது ஷூட்டிங்!

    By
    |

    சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்துக்காக, சென்னையில் ரஷ்யா போல செட் அமைத்து படமாக்க உள்ளனர்.

    நடிகர் விக்ரம் நடித்து வரும் படம், கோப்ரா. இதை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

    இவர், டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கி உள்ளார்.

     கட்டப்பா.. ஆரம்பமாகும் ஐபிஎல்.. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ரம்யா கிருஷ்ணன் போட்ட மாஸ் மீம்! கட்டப்பா.. ஆரம்பமாகும் ஐபிஎல்.. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாக ரம்யா கிருஷ்ணன் போட்ட மாஸ் மீம்!

    நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

    நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

    கோப்ரா படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் கே.ஜி.எஃப் படத்தில்
    நடித்தவர். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், கனிகா உள்பட
    பலர் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து வருகிறார்.

    கொரோனா பரவல்

    கொரோனா பரவல்

    இதில் விக்ரம் பல கெட்டப்களில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வந்தபோதுதான் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் ஷூட்டிங்கை பாதியிலேயே முடித்துவிட்டு படக்குழு அவசர அவசரமாகத் சென்னைத் திரும்பியது.

    சாத்தியமில்லை

    சாத்தியமில்லை

    இப்போது படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும் வெளிநாடுகளுக்கு சென்று
    ஷூட்டிங் நடத்த வழி இல்லை என்று கூறப்படுகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து இன்னும் பல நாடுகளுக்கு முழுமையாக தொடங்கவில்லை. இதனால் ரஷ்யா சென்று படப்பிடிப்பை நடத்துவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

    சென்னையில் செட்

    சென்னையில் செட்

    இதனால் படக்குழு தங்கள் திட்டத்தை மாற்றியுள்ளது. ரஷ்யாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை சென்னையில் செட் அமைத்து ஷூட்டிங்கை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

    English summary
    Vikram’s Cobra team has planned to recreate Russia in Chennai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X