'நீதானடா மதி, நீதான மேத்ஸ் வாத்தியாரு?'மிரட்டலாக வெளியான விக்ரமின் கோப்ரா டீசர்..ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர், அஜய் ஞானமுத்து.
இவர் அடுத்து, விக்ரம் ஹீரோவாக நடிக்கும், கோப்ரா படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி
இது, விக்ரமிற்கு 58-வது படம். கதாநாயகியாக, ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் கே.ஜி.எப் படத்தில் நடித்தவர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

தெலுங்கு, இந்தி
இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில், லலித் குமார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. அனைத்து மொழிக்கும் ஏற்றது போல டைட்டில் வேண்டும் என்பதால் கோப்ரா என்று வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா லேட்
ஆக்ஷன் த்ரில்லர் படமான இதன் டைட்டிலுக்கும் விக்ரம் கேரக்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று இதன் இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியிருந்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாகத் தள்ளிப் போனது. இதின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கணித ஆசிரியர்
இதன் இரண்டாவது லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசர் மூலம், நடிகர் விக்ரமின் கேரக்டர் பெயர் மதி என்றும் அவர் கணித ஆசிரியர் என்றும் தெரிகிறது. வில்லன் இர்பான் பதான் ஆக்ரோஷமாக, 'நம்பர்ஸ் வச்சுதான விளையாடறான், நான் தர்றேன், நிறைய நம்பர்ஸ் என்கிறார்.

மிரட்டும் பிஜிஎம்
ரோபோ சங்கர், கே.எஸ்.ரவிகுமார், ஶ்ரீனிதி ஷெட்டி ஆகியோரும் டீசரில் இடம்பெற்றுள்ளனர். இந்த டீசரில் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. இதையடுத்து இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான பார்வைகளை இந்த டீசர் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











