ஆகஸ்ட் 31 ல் விக்ரமின் கோப்ரா ரிலீஸ்...டிரைலருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை : இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கேஜிஎஃப்' நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமான கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார் என சொல்லப்பட்டது.'மாஸ்டர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குனர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில் 'கோப்ரா' படத்தின் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

எதிர்பார்ப்பை கிளப்பிய பாடல்கள்
இதைத் தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கோப்ரா படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எப்போது படத்தை பார்க்க போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அவர் வில்லன் கிடையாது
கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம், இந்த படத்தில் இஃபான் பதான் வில்லன் கிடையாது. அவர் படத்திலும் ஆல் ரவுண்டர் தான் என தெரிவித்தார். இதனால் இர்ஃபான் இல்லை என்றால், வேறு யார் வில்லன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்த சமயத்தில் கோப்ரா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக தகவல் பரவியது.

தள்ளி வைக்கப்பட்ட கோப்ரா ரிலீஸ்
ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீசை அறிவித்த கார்த்தியின் விருமன் படத்தை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன் படி ஆகஸ்ட் 12 ம் தேதி விருமன் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, ரிலீசிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ரிலீஸ் தேதி சொல்லவேயில்லையே
ஆனால் கோப்ரா படத்தின் ரிலீஸ் எப்போது என இதுவரை அறிவிக்காமலேயே இருந்தனர். இதனால் கோப்ரா படத்தை எப்போ தான் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஆடியோ வெளியீட்டிற்கு பிறகு படம் எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை என ரசிகர்கள் சோகமாகினர்.

கோப்ரா ரிலீஸ் தேதி வந்தாச்சு
இந்நிலையில் ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் தான் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சமயத்தில் கோப்ரா ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்தது. இதன்படி, ஆகஸ்ட் 31 ம் தேதி கோப்ரா ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே வெளியான தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

3 மொழிகளில் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் கோப்ரா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதோடு, கொட்டும் மழையில் மேட்ரிக்ஸ் பட ஸ்டையிலில் கும்பலுடன் விக்ரம் சண்டை போடுவது போன்ற போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதுவாவது கன்ஃபார்ம் தேதியா?
ஆனால் கோப்ரா படம் பல முறை தள்ளி போவதால் இதுவாவது கன்ஃபார்மான தேதியா என சந்தேகத்துடனேயே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் படத்தின் டிரைலரை எப்போ வெளியிட போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.இந்த தேதியை லாக் செய்து கொள்ளவும் என்ற அஜய் ஞானமுத்துவின் ட்விட்டிற்கு, ஏற்கனவே லக் செய்த சாவி தொலைந்து போச்சா என பலரும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











