»   »  10 கெட்டப்.. 4 வேடம்... திகில் காதல்... பட்டையைக் கிளப்ப வரும் "ஐ" விக்ரம்!

10 கெட்டப்.. 4 வேடம்... திகில் காதல்... பட்டையைக் கிளப்ப வரும் "ஐ" விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘ஐ' படத்தில், 10 விதமான தோற்றங்களுடன் 4 வேடங்களில் நடித்து இருக்கிறாராம் விக்ரம்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாகிறது ஐ திரைப்படம். பிரம்மாண்டத்துக்குப் பெயர் பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


இது தவிர சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


இந்நிலையில், ஐ படத்தில் நடித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். அப்போது அவர் கூறியதாவது:-


10 வித தோற்றங்கள்...

10 வித தோற்றங்கள்...

‘ஐ' படத்தில், நான் 10 விதமான தோற்றங்களுடனும், 4 வேடங்களிலும் நடித்து இருக்கிறேன். இந்த படத்துக்காக என் உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கடின உழைப்பை தந்திருக்கிறேன்.


காதலும், திகிலும் கலந்தது...

காதலும், திகிலும் கலந்தது...

இது, காதலும் திகிலும் கலந்த படம். சினிமாவை நேசிப்பவர்களுக்கு மேலும் நேசத்தை தரும் படமாக இருக்கும்.


வித்தியாசமான படப்பிடிப்பு தளங்கள்...

வித்தியாசமான படப்பிடிப்பு தளங்கள்...

படப்பிடிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் நிச்சயமாக பேசப்படும். குறிப்பாக சீனா பற்றி குறிப்பிட வேண்டும்.


விமானம் - ரயில்- கார்.. நடராஜா!

விமானம் - ரயில்- கார்.. நடராஜா!

அங்கு குறிப்பிட்ட இடங்களுக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து ரயிலில் பயணம் செய்து, பின்னர் கார்களிலும், நடந்தும் போய் படப்பிடிப்பு தளத்தை அடைந்தோம்.


மிரட்டும் பாடல்கள், சண்டைகள்

மிரட்டும் பாடல்கள், சண்டைகள்

ஐ படத்தின் சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிரட்டலாக இருக்கும்.


407 தியேட்டர்களில்...

407 தியேட்டர்களில்...

அமெரிக்காவில் மட்டும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், 407 திரைகளில், ‘ஐ' படம் திரையிடப்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


English summary
Vikram's four different avatars in Shankar's 'I', featuring Amy Jackson and Upen Patel, have become a talking point among his fans.
Please Wait while comments are loading...