24 மணி நேரத்தில் 20 லட்சம் வியூஸ்... அசத்தும் 'ஐ' டிரைலர்
சென்னை: சங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள 'ஐ' திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து புது சாதனையை படைத்துள்ளதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
'ஐ' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த திங்கள்கிழமை சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் ஹாலிவுட் தரத்துக்கு இணையான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் சமூக வலைத்தளங்களில் அப்பட டீசர் குறித்த விவாதம் மற்றும் பாராட்டு அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து யூடூப்பில் ஐ திரைப்பட டீசரை ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்து ரசித்தனர். இதன் காரணமாக டீசர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 20 லட்சம் வியூசை தாண்டிவிட்டது.
"ஒரு டிரைலருக்கு இதுபோன்ற ஒரு வரவேற்பு கிடைத்ததை நாங்கள் பார்த்தது இல்லை. 'ஐ' திரைப்படம், திரையுலகில் புதிய உச்சத்தை பதிவு செய்யும். இந்த படத்தில் நாங்கள் சம்மந்தப்பட்டுள்ளோம் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது" என்று சோனி மியூசிக் இந்தியாவின் தெற்கு பிரிவு தலைவர் அசோக் பர்வானி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











