»   »  கபாலியை அடுத்து இருமுகன் ரூ.100 கோடி வசூல்: சீயான் ஹேப்பி அண்ணாச்சி

கபாலியை அடுத்து இருமுகன் ரூ.100 கோடி வசூல்: சீயான் ஹேப்பி அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் நடித்த இருமுகன் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த இருமுகன் படம் கடந்த 8ம் தேதி வெளியானது. படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


Vikram's Iru Mugan joins Rs. 100 crore club

அந்த அளவுக்கு அசத்தியிருந்தார். இந்நிலையில் படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.


Vikram's Iru Mugan joins Rs. 100 crore club

இருமுகன் தற்போதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது என்றும், சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இருமுகன் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Iru Mugan producer Shibu Thameens confirmed that the Vikram starrer has crossed Rs. 100 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil