பாலிவுட்டிற்கு செல்லும் இருமுகன்...ஹீரோவாக விக்ரமே நடிக்க வாய்ப்பு
மும்பை : தான் நடிக்கும் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கக் கூடிய நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது நடிப்பு திறமையால் புகழின் உச்சிக்கு சென்றவர்.
இவர் சமீபத்தில் இரு வேடங்களில் நடித்த படம் இருமுகன். இதில் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். சிபு தமீனின் தமீம்ஸ் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது.

ரீமேக்காகும் இருமுகன்
இதில் ஹீரோ - வில்லன் என்ற இரு கேரக்டர்களில் முதல் முறையாக விக்ரம் நடித்திருந்தார். இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்திலும் விக்ரம் அல்லது பாலிவுட்டின் முன்னணி நடிகர் யாராவது நடிக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழ் படங்களுக்கு வரவேற்பு
சமீப காலமாக தமிழில் சூப்பர் ஹிட்டான பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இருமுகன் படமும் இணைய உள்ளது. தமிழில் இந்த படத்தை இயக்கிய டைரக்டர் ஆனந்த் ஷங்கர் தான் இந்தியிலும் இயக்க உள்ளார்.

எனிமிக்கு பிறகு இருமுகன்
டைரக்டர் ஆனந்த் ஷங்கர் தற்போது விஷால், ஆர்யா நடிக்கும் எனிமி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த படம் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

துபாயில் தயாராகும் எனிமி
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க உள்ளது. துபாயில் 20 நாட்கள் சூட்டிங் நடைபெற உள்ளது. அதன் பிறகு ரிலீசிற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது. எனிமி படத்தின் வேலைகள் முடிந்த பிறகு இந்தி இருமுகன் படத்தை அவர் இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











