கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த விக்ரம்...அதிர வைத்த ரசிகர்கள்
சென்னை : நடிகர் விக்ரம் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்துள்ள விக்ரம், அடுத்ததாக கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Recommended Video
கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்தாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் பா.ரஞ்சித் படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. பிறகு அவருக்கு மாரடைப்பு கிடையாது என விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் விளக்கம் அளித்தார்.

விக்ரமிற்கு ஹார்ட் அட்டாக் கிடையாது
விக்ரமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இதயத்தில் லேசான அசவுகரியம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

குழப்பத்தில் ரசிகர்கள்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் விக்ரம்,பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.அதன் பிறகு விக்ரம் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். விக்ரமுடன் இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவர் கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் விக்ரம் பங்கேற்பாரா என்ற குழப்பத்திலேயே இருந்தனர்.

கோப்ரா ஆடியோ விழா
சென்னை Phoenix Market City யில் நடக்கும் கோப்ரா ஆடியோ விழாவில் விக்ரம் நிச்சயம் கலந்து கொளவார் என படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து படத்தின் மொத்த பாடல்கள் லிஸ்டையும் வெளியிட்ட செவன் ஸ்கிரன் ஸ்டுடியோ, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் இந்த விழா நடக்கும் என அறிவித்தது.

விக்ரமின் மாஸ் என்ட்ரி
கோப்ரா ஆடியோ விழாவில் உதயநிதி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இசை நிகழ்ச்சியும் துவங்கப்பட்டது. ஆனால் விக்ரமை காணோம் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், மாஸ் என்ட்ரி கொடுத்தார் விக்ரம். அரங்கம் அதிரும் ரசிகர்களுடன் கூச்சலுடன் ஸ்டையிலாக கையசைத்த படி வந்தார் விக்ரம். ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் வந்த விக்ரம் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக கூச்சலிட்டு கத்தினர்.

கோப்ராவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனா அறிமுகமாகிறார்.இவர்களுடன் மியா ஜார்ஜ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் மேத்திவ், பத்மபிரியா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











