விக்ரம் வீட்டில் இருந்து வரும் மேலும் ஒரு ஹேன்ட்சம் ஹீரோ: த்ருவ் இல்லை

By Siva

Recommended Video

விக்ரம் வீட்டில் இருந்து வரும் அடுத்த Hero- வீடியோ

சென்னை: பப்ஜி படம் மூலம் ஹீரோ ஆகியுள்ளார் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்.

விக்ரமின் மகன் த்ருவ் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா மூலம் ஹீரோவாகியுள்ளார். இந்நிலையில் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

கமல் ஹாஸனின் அண்ணன் சாருஹாஸனை ஹீரோவாக வைத்து தாதா படத்தை எடுத்த விஜய் ஸ்ரீ பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

அர்ஜுமன்

அர்ஜுமன்

பப்ஜி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் அர்ஜுமன். அந்த படத்தில் பிக் பாஸ் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கிறார். அர்ஜுமன் விக்ரமின் சொந்தக்காரர் என்று தெரியாமலேயே அவரை தேர்வு செய்துள்ளார் இயக்குநர். அர்ஜுமன் நடிக்க வாய்ப்பு தேடுவது குறித்து அறிந்த விஜய் ஸ்ரீ அவரை சந்தித்து பேசியுள்ளார்.

லுக்

லுக்

அர்ஜுமனின் சிகை அலங்காரம், லுக் எல்லாம் இயக்குநருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பப்ஜி படத்திற்கு சரியான ஹீரோ அர்ஜுமன் தான் என்று முடிவு செய்து அவரை ஒப்பந்தம் செய்துள்ளார் விஜய் ஸ்ரீ. அர்ஜுமனை ஒப்பந்தம் செய்த பிறகு ஒரு நாள் அவர் விக்ரம் ஜாடையில் இருப்பதாக விஜய் ஸ்ரீக்கு தோன்றியுள்ளது. தம்பி, நீங்க விக்ரம் சார் மாதிரி இருக்கிறீர்கள் என்று விஜய் அர்ஜுமனிடம் தெரிவிக்க அவரின் தங்கை மகன் தான் நான் என்று பதில் அளித்துள்ளார் அவர்.

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

அர்ஜுமன் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். பப்ஜி படத்தில் மொட்டை ராஜேந்திரன், பிக் பாஸ் புகழ் ஜூலி ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்களாம். ஐஸ்வர்யா தத்தா தவிர்த்து 4 ஹீரோயின்களை தேடி வருகிறாராம் இயக்குநர். பப்ஜி என்கிற பெயரை பார்த்து பயந்துவிட வேண்டாம். இது ஒரு காமெடி த்ரில்லர் ஆகும். அதுவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம்.

தம்பி

தம்பி

விக்ரமின் தம்பி அரவிந்த் விக்டர் அண்மையில் தான் நடிகர் ஆனார். புதுமுகம் இருதயராஜ் இயக்கி வரும் எப்போ கல்யாணம் படத்தில் அரவிந்த் வில்லனாக நடித்து வருகிறார். அவர் கையில் தற்போது இரண்டு மலையாள படங்கள் உள்பட 3 படங்கள் உள்ளன. விக்ரம் வீட்டில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு இளம் ஹீரோக்கள், ஒரு வில்லன் ஆகியோர் வந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X