விக்ரமின் ஸ்கெட்ச்.... தீபாவளியன்று டீசர்!
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' பட டீசர் தீபாவளி தினமான அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது.
விக்ரம், தமன்னா, ஸ்ரீ ப்ரியங்கா நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்கெட்ச்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிகட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் அக்டோபர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

டீஸர் வெளியீடு முடிந்து அடுத்த சில நாட்களில் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டு படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.
படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரிக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications