»   »  சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டி மூலம் கோலிவுட்டில் ஹீரோவாகும் சீயான் மகன்

சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டி மூலம் கோலிவுட்டில் ஹீரோவாகும் சீயான் மகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் த்ருவ்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் அர்ஜுன் ரெட்டி. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Vikram's son Dhruv to make his debut in Kollywood

படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தனுஷ் வாங்கியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் மூலம் த்ருவ் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தை யார் இயக்குகிறார்கள், ஹீரோயின் யார் என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும்.

வாழ்த்துக்கள் த்ருவ்.

English summary
Chiyaan Vikram's son Dhruv is making his debut in Kollywood with the tamil remake of superhit telugu movie Arjun Reddy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil