»   »  விக்ரம் இயக்கத்தில் நாளை வெளியாகிறது 'தி ஸ்பிரிட் ஆப் சென்னை'

விக்ரம் இயக்கத்தில் நாளை வெளியாகிறது 'தி ஸ்பிரிட் ஆப் சென்னை'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்திய மழை, வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவித்ததை மையமாக வைத்து விக்ரம் உருவாக்கிய 'தி ஸ்பிரிட் ஆப் சென்னை' ஆல்பம் நாளை வெளியாகிறது.

ஒற்றுமையை வலியுறுத்தி விக்ரம் இயக்கியிருக்கும் இந்த ஆல்பத்தை அவரே தயாரித்திருக்கிறார். கிரிநாத் இசையில் விஜய் மில்டன் ஒளிப்பதிவில் இந்த ஆல்பம் உருவாகியிருக்கிறது.

Vikram's The Spirit Of Chennai Released Tomorrow

இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபுதேவா, சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, அமலாபால், நயன்தாரா, குஷ்பூ ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் அபிஷேக் பச்சன், நிவின் பாலி, பிருத்விராஜ் உள்ளிட்ட மற்ற மாநில நடிகர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.

Vikram's The Spirit Of Chennai Released Tomorrow

இதில் இடம்பெறும் ஒற்றுமை குறித்த பாடலை எஸ்.பி.பி, ஹரிஹரன் என சுமார் 29 பாடகர்கள் ஒன்றிணைந்து பாடியுள்ளனர்.இதனால் இந்த ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து விக்ரம் "உலகம் இதுவரை கண்டிராத பெரு வெள்ளம் சென்னையை சூழ்ந்த அந்த நாட்கள் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிர் வாழ அத்தியாவசிய தேவையான உணவு, குடிக்க தண்ணீர் இது போல எதுவுமே கிடைக்காமல் தனிமைப் படுத்தப்பட்டது சென்னை. சில இடங்களில் உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை இந்த மழை.

Vikram's The Spirit Of Chennai Released Tomorrow

இந்தப் பெரு வெள்ளம் தேங்கிக் கிடந்ததைப் போல,மக்கள் தேங்கவில்லை. மனிதநேயம் உள்ள அனைவரும் வெளியே வந்தார்கள். அவர்களால் முடிந்தவரை அத்துனை பேரையும் வெளியே இழுத்து வந்தார்கள். வெள்ளத்தினைத் தாண்டி, உலகில் இருக்கும் அத்தனை பேரின் கவனத்தினை ஈர்த்தது.

வெள்ளத்திற்கு எதிராக இறங்கி, என் நகரத்தினை மீட்டெடுப்பேன் என சபதமேற்று வந்தவர்கள் அவர்கள். சென்னை மக்களுக்கிடையே இருந்த அந்த ஒற்றுமை என்னையும் அவர்களோடு ஏதோ ஒரு வழியில் இணைத்துக் கொள்ளத் தூண்டியது. உதவும் மனப்பான்மையுடன் இருக்கும் இந்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது இந்த இயற்கைப் பேரிடர் தானா? என்ற கேள்வி என்னுள் வந்தது.

எந்தவித வெறுப்பும், தயக்கமுமின்றி, ஒற்றுமையாகக் களமிறங்கிய, அந்த ஆயிரக்கணக்கான நல் உள்ளங்களை என் கேள்விக்கு பதிலாக நான் பார்த்தேன். மனிதநேயத்தின் மீதான மதிப்பு என்னுள் இப்போது இன்னும் அதிகமானது" என்று கூறியிருக்கிறார்.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த ஆல்பம் வெளியாகிறது. இதனை முன்னிட்டு #chiyaanvikram, #SpiritOfChennai, #vikram போன்ற ஹெஷ்டேக்குகளை உருவாக்கி அதனை இந்தியளவில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Read more about: vikram விக்ரம்
English summary
Vikram's 'The Spirit Of Chennai' Music Album Released Tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil