For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விக்ரமின் டாப் 10 படங்கள் - ஒரு பார்வை

  By Shankar
  |

  ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தோல்விகளைத் தந்தவர் நடிகர் விக்ரம். ஆனால் அந்தத் தோல்விகளையே படிக்கற்களாக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தவரும் அவர்தான்.

  கிட்டத்தட்ட அனைத்து இயக்குநர்களிடமும் நடித்துள்ளார். ஆனால் விக்ரமிடம் உள்ள ஒரு பாலிசி புது இயக்குநர்களை மிரள வைக்கிறது. குறைந்தது மூன்று படமாவது இயக்கியவர்களுக்கே தனது கால்ஷீட் என்கிறார்.

  விக்ரம் இதுவரை நடித்த படங்களில் முதன்மையான பத்துப் படங்கள் பற்றிய ஒரு பார்வை இது...

  சேது

  சேது

  பாலா இயக்கிய முதல் படம். ஒரு நல்ல நடிகராக விக்ரமை அடையாளப்படுத்திய விதத்தில் இதுவே அவருக்கு முதல் படம் எனலாம். பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படம், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

  தில்

  தில்

  தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படம்தான் விக்ரமை சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டியது. அளவான நடிப்பு, அழுத்தமான சண்டை, அதிரடியான திருப்பங்கள் என விக்ரமுக்கு புதிய பரிமாணம் கொடுத்த படம் இது.

  காசி

  காசி

  பார்வையற்ற இளைஞர் வேடத்தில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், அதற்கெல்லாம் உச்சமாக அமைந்தது விக்ரம் நடித்து, வினயன் இயக்கியிருந்த காசி. விக்ரம் என்ற நடிகனைத் தாண்டி நிஜமான பார்வையற்ற இளைஞன் காசிதான் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரிந்தனர்.

  தூள்

  தூள்

  விக்ரமின் எவர்கிரீன் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் உண்டு. எந்த கேள்வியும் கேட்கவிடாமல் பரபரவென ஓடிய இதன் திரைக் கதைக்கு உயிர் கொடுத்தவர் விக்ரம். நல்ல வசூலுடன் வெள்ளி விழா கண்ட படம் இது.

  சாமி

  சாமி

  போலீஸ் கதையை மையமாக வைத்து வந்த படங்களில் சாமிக்கு தனி இடம் உண்டு. 'போலீஸ்னா இப்படித்தான்டா இருக்கணும்!' என்று சொல்ல வைத்த படம். வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து இப்போது இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் தயாராகி வருகிறது.

  ஜெமினி

  ஜெமினி

  விக்ரமின் ஆக்ஷன் ஹீரோ இமேஜை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திய படம் இந்த ஜெமினி. சரண் இயக்கியிருந்தார். ஏவி எம் நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்க உத்வேகமாக அமைந்தது இந்த ஜெமினி. இந்தப் படம் வெளியான பிறகு ரொம்ப நாளைக்கு விக்ரமும் ரசிகர்களும் ஓ போடு என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

  பிதா மகன்

  பிதா மகன்

  பாலாவின் இயக்கத்தில் விக்ரம் நடித்த இரண்டாவது படம் பிதாமகன். விக்ரமுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது இந்தப் படம். உடன் நடித்த சூர்யாவுக்கு இந்தப் படம் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.

  அந்நியன்

  அந்நியன்

  ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த முதல் படம் இது. அன்றைய நாளில் மிகப் பெரிய பட்ஜெட். ஐடிபிஐ வங்கியின் நிதியுதவியோடு இந்தப் படத்தை எடுத்திருந்தனர். தமிழில் ஆரம்பத்தில் சராசரியாகப் போன இந்தப் படம், தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.

  ராவணன்

  ராவணன்

  மணிரத்னம் இயக்கிய இந்தப் படம் விக்ரமின் பெரிய தோல்விப் படங்களில் ஒன்றாக இருந்தாலும், நடிப்பில் அசத்தியிருந்தார்.

  தெய்வத் திருமகள்

  தெய்வத் திருமகள்

  இயக்குநர் விஜய்யும் விக்ரமும் கைகோர்த்த முதல் படம் இது. ஆட்டிசம் பாதித்தவராக விக்ரம் நடித்திருந்தார். ஐ யாம் சாம் படத்தின் தழுவல் என்று விமர்சிக்கப்பட்டாலும், விக்ரம் மற்றும் பேபி சாராவுக்காக குடும்பத்தோடு போய் பார்த்து கண்ணீர் விட்டு திரும்பினார்கள் தமிழ் ரசிகர்கள்.

  ஐ

  கடந்த ஆண்டு விக்ரம் நடித்த இரண்டு படங்கள் ராஜபாட்டை, தாண்டவம் மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வந்த டேவிட் இரண்டுமே தோல்வியைத் தழுவின. இதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இப்போது ஷங்கர் இயக்கும் ஐ படத்துக்காக உழைத்து வருகிறார் விக்ரம்!

  Read more about: vikram விக்ரம்
  English summary
  Here is the list of actor Vikram's top 10 movies of his career.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X