ஐ படத்திற்காக மொட்டை பாஸான விக்ரம்

By Siva

சென்னை: விக்ரம் ஷங்கரின் ஐ படத்திற்காக மொட்டை அடித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். அம்பி, ரெமோ, அந்நியன் என்று அவரின் 3 கெட்டப்புகளுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு விக்ரம், ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் ஐ.

வழக்கம் போல் ஷங்கர் ஐ படத்தின் கதையை ரகசியமாக வைத்துள்ளார். படத்தில் விக்ரம் எத்தனை கெட்டப்பில் வருகிறார் என்று கூட யாருக்கும் தெரிவிக்கவில்லை.

குண்டு விக்ரம்

குண்டு விக்ரம்

ஐ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில் விகர்ம் குண்டாக இருந்துள்ளார். படத்திற்காக குண்டாகியிருக்கிறார்.

ஒல்லிப்பாச்சான் விக்ரம்

ஒல்லிப்பாச்சான் விக்ரம்

அடுத்தகட்ட படப்பிடிப்பில் விக்ரம் ஒல்லிக் குச்சியாக இருக்க வேண்டும் என்று ஷங்கர் தெரிவித்துள்ளார். விக்ரமும் எவ்வளவோ முயன்றும் ஷங்கர் எதிர்பார்த்த அளவுக்கு ஒல்லியாக முடியவில்லை. இதையடுத்து ஷங்கர் விக்ரமை சீனாவுக்கு அனுப்பு ஒல்லிப் பாச்சானாக ஆக்கியுள்ளார்.

மொட்டை பாஸ் விக்ரம்

மொட்டை பாஸ் விக்ரம்

அண்மையில் சினிமா நிகழ்ச்சி ஒன்றுக்கு ஐ படப்பிடிப்பில் இருந்து நேராக வந்த விக்ரமை பார்த்த அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம் சீயான் மொட்டை பாஸாக இருந்தார். இதைப் பார்த்தவுடன் என்ன விக்ரம் படத்தில் எத்தனை கெட்டப்பில் வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கே அது தெரியாது பாஸ் என்று கூறிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X