twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடாரம் கொண்டான் அப்டேட்.. விக்ரம் பற்றிய சர்ப்ரைஸ் உடைத்த ஜிப்ரான்!

    கடாரம் கொண்டான் படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் நடிகர் விக்ரம்.

    |

    Recommended Video

    கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளார்

    சென்னை : கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரம் ஒரு முக்கியமான பாடலை பாடி இருப்பதாக தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

    கமல் நடிப்பில் தூங்காவனம்' படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரமை வைத்து கடாரம் கொண்டான்' படத்தை இயக்கியுள்ளார்.

    Vikram sings a motivational song in Kadaram Kondan

    இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    பிரெஞ்ச் படமான பாயிண்ட் பிளாக் படத்தின் ரீமேக்தான் இப்படம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

    ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாட்களில் ஓடிப்போன ஹீரோயின்... அடம்பிடித்த அட்டக்கத்தி தினேஷ் நாயகி! ஷூட்டிங் ஆரம்பித்த பத்தே நாட்களில் ஓடிப்போன ஹீரோயின்... அடம்பிடித்த அட்டக்கத்தி தினேஷ் நாயகி!

    இந்நிலையில், இப்படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றைத் தந்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். அதாவது, இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை நடிகர் விக்ரம் சொந்தக் குரலில் பாடி நடித்திருக்கிறாராம்.

    இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் ஒன்றை ரெக்கார்ட் செய்து விட்டேன். அப்பாடல் அதிக புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஜிப்ரானின் இந்தப் பதிவால், விக்ரம் பாடிய பாடலைக் கேட்க அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

    English summary
    "Yaaay! Positivism kicks in. I'm glad to have recording done with the great and multitalented Vikram sir for KadaramKondan, singing with full energy plus, vibes plus, enthusiasm. I believe this as a motivational song - can be played before starting our day", music director Gibron tweets.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X