Veera Dheera Sooran: விக்ரம் உடன் வீர தீர சூரன் படம் பார்த்த S.K.. திருவிழாவாக மாறிய தியேட்டர்
சென்னை: வீர தீர சூரன் பாகம் 2 படம் நேற்று அதாவது மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆவதில் பல பிரச்னைகள் இருந்ததால், அதன் பல கட்ட சட்ட போராட்டங்களுக்குப் பின்னர் படம் நேற்று மாலை 6.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் பல காட்சிகள் சிறிய இடைவேளையில் திரையிடப்பட்டது. இதில் ரசிகர்களுடன் படம் பார்க்க, நடிகர் விக்ரம், படத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் என பல தியேட்டருக்கு வந்துள்ளார்கள்.
அருண் குமார் இயக்கத்தில் உருவான வீர தீர சூரன் பாகம் 2 படத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். இதனால் படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலோடு இருந்தார்கள். மேலும் இயக்குநர் அருண்குமார் விக்ரமின் தீவிர ரசிகர் என்பதால், ஃபேன் சம்பவமாக இந்த படத்தை எடுத்துள்ளார்.

ரசிகர்கள்: படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். நேற்று காலை படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்கள், படம் ரிலீஸ் ஆவதற்கான சட்ட போராட்டங்கள் முடியும் வரை தியேட்டரிலேயே இருந்தார்கள். மாலையில் திரையிடப்பட்ட காட்சியில் படத்தை பார்த்துவிட்டுத்தான் திரும்பினார்கள். பல தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என விக்ரமைக் கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். இது தொடர்பாக இணையதளத்தில் படம் எப்போது வேண்டுமானாலும் வரட்டும், அதுவரைக்கும் சியானைக் கொண்டாடுவோம் என புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார்கள்.
ஜி.வி: படக்குழுவின் போராட்டத்திற்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஒருவழியாக முடிவு கிடைத்ததால், படம் நேற்று மாலையே முதல் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக படம் திருப்தியைக் கொடுத்ததால் காத்திருந்ததற்கு மிகவும் தரமான படத்தை விக்ரம் கொடுத்துள்ளார் எனக் கூறி வருகிறார்கள். படத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் நடிப்பு என்பது வெகு சிறப்பாக இருந்தது. மேலும் படம் முழுவதும் தனது இசையால் படத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தி வைத்துள்ளார் ஜி.வி.

விக்ரம், SK: இப்படியான நிலையில், நேற்று மாலை ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான சத்யம் சினிமாவில் நடிகர் விக்ரம், துஷாரா விஜயன் ,சிவகார்த்திகேயன், துருவ் விக்ரம், படத்தின் இயக்குநர் அருண் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











