விக்ரம் படத்தோட சூப்பர் அப்டேட் வெளியாகியிருக்கு... என்னன்னு பாக்கலாமா!

சென்னை : நடிகர் விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இணைந்து உருவாகிவரும் படம் துருவ நட்சத்திரம்.

Recommended Video

Dhurv -வை பங்கமாய் கலாய்த்த Chiyaan Vikram | Bobby Simha, Team Interview

இந்தப் படம் நீண்ட நாட்களாக சூட்டிங்கிலேயே இருக்கிறது. படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகான் படம்

மகான் படம்

நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், சிம்ஹா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான படம் மகான். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் படம் ரசிகர்களிடையே அதிரி புதிரி வரவேற்பை பெற்றுள்ளது. சியானுக்கும் இந்தப் படம் அவரது மகுடத்தில் மேலும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது.

 தாமதமாகும் துருவ நட்சத்திரம்

தாமதமாகும் துருவ நட்சத்திரம்

முன்னதாக விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிவரும் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு அவர்களிடையே காணப்படுகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.

வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்

வரவேற்பை பெற்ற ட்ரெயிலர்

படத்தில் நடிகர் விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், பார்த்திபன், விநாயகன், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆயினும் படம் இன்னமும் ஆமை வேகத்திலேயே நகர்ந்து வருகிறது.

ஸ்டைலிஷ்ஷான விக்ரம்

ஸ்டைலிஷ்ஷான விக்ரம்

இந்தப் படத்தின் ட்ரைலரில் ஸ்டைலிஷ்ஷான விக்ரமை பார்க்க முடிந்தது. கௌதம் மேனன் எப்போதும் தனது படங்களின் இயக்கத்திற்கு அதிக காலங்களை எடுத்துக் கொள்வார். ஆனால் இந்தப் படம் நெடுங்காலமாக புரொடக்ஷனிலேயே உள்ளது. இந்தப் படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியான நிலையிலும், படத்தின் ரிலீஸ் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருப்பது விக்ரம் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது.

 விக்ரம், கௌதம் மேனனிடையே ஈகோ மோதல்?

விக்ரம், கௌதம் மேனனிடையே ஈகோ மோதல்?

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில நாட்கள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் ஆனால் கௌதம் மேனன் மற்றும் விக்ரம் இடையில் சரியான புரிதல் இல்லாமல் அவர்களின் ஈகோவிற்கு இந்தப் படம் பலியாக வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டப்பிங்கை துவக்கிய விக்ரம்

டப்பிங்கை துவக்கிய விக்ரம்

இந்நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விக்ரம் துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்பை த்ரில்லராக எடுக்கப்பட்டுவரும் இந்தப் படத்தில் நியூயார்க்கை சேர்ந்த அண்டர் கவர் ஏஜெண்டாக விக்ரம் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X