»   »  கேரளா, கர்நாடகத்தில் ஐ விளம்பரத்தை தொடங்கிய விக்ரம்

கேரளா, கர்நாடகத்தில் ஐ விளம்பரத்தை தொடங்கிய விக்ரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு பக்கம் சென்சாரின் கெடுபிடி காரணமாக ஐ வருமா வராதா என விவாதம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ படத்துக்கு தீவிரமாக விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் விக்ரம்.

தமிழ்ப் படங்களை நேரடியாக அதிக அரங்குகளில் வெளியிடும் மாநிலங்கள் கேரளா மற்றும் கர்நாடகா.

ரஜினியின் லிங்கா இங்கெல்லாம் தலா 250 மற்றும் 200 அரங்குகளில் வெளியானது.

அதிக அரங்குகள்

அதிக அரங்குகள்

இதே அளவு அரங்குகளைப் பிடிக்கும் முயற்சியில் உள்ளார் ஐ படத் தயாரிப்பாளர். எனவே இந்தப் பகுதியில் அதிக அளவு விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளார் படத்தின் நாயகன் விக்ரம்.

பெங்களூரில்

பெங்களூரில்

நேற்று காலை விமானம் மூலம் பெங்களூர் சென்ற விக்ரம், கோரமங்களாவில் உள்ள பிவிஆர் மாலில் தனது ரசிகர்களைச் சந்தித்தார். பிரஸ் மீட்டில் ஐ படம் பற்றி விலாவாரியாகப் பேசினார்.

ரூ 7.5 கோடி

ரூ 7.5 கோடி

இந்தப் படத்தின் கர்நாடக உரிமை ரூ 7.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. எனவே பெரிய அளவில் விளம்பரங்கள் அமைந்தால்தான் தப்ப முடியும் என விநியோகஸ்தர் விரும்பியதால் இந்த ஏற்பாடு.

கேரளா

கேரளா

பெங்களூர் நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து கொச்சி பறந்தார் விக்ரம். கொச்சியின் பிரபல லுலு மாலில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். தனது ரசிகர்களையும் பார்க்கிறார்.

ஷங்கரும்

ஷங்கரும்

அடுத்து இயக்குநர் ஷங்கர், நாயகி எமி ஜாக்ஸனும் இதுபோன்ற சந்திப்புகளில் பங்கேற்க உள்ளனர்.

English summary
Actor Vikram kick starts his campaign for I in Kerala and Karnataka.
Please Wait while comments are loading...