twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘’விக்ரம்’’ வெற்றி விழா : கேலி, கிண்டலுக்கு பதில் சொல்ல நேரமில்லை... கமல்ஹாசன் பேச்சு !

    |

    சென்னை : கேலி, கிண்டல் செய்பவர்களுக்கு பதில் அளிக்க எனக்கு நேரம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம், 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால், விக்ரம் படத்திற்கு மக்களின் ஆதரவு குறையாமல் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    3 நிமிஷம் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்...விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலுக்கு எதுவும் இல்லையா? 3 நிமிஷம் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்...விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலுக்கு எதுவும் இல்லையா?

    விக்ரம் திரைப்படத்திற்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    எந்த சர்ச்சையும் இல்லாமல்

    எந்த சர்ச்சையும் இல்லாமல்

    விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த படத்தின் வெற்றிக்கு நான் தான் காரணம் என்று யாரும் தனியாக மார்த்தட்டிக் கொள்ள முடியாது. ஏன் என்றால், ஒவ்வொருவரின் வெற்றிக்கு பின்னாலும் முகம் தெரியாத பல முகங்கள் இருப்பதாக கமல் கூறினார். இந்த பத்து வருட காலத்தில் எந்த சர்ச்சையும் இல்லாமல வெளியான படம் இதுதான் இதற்கு உதயநிதி மற்றும் மகேந்திரன் தான் காரணம் என்றார்.

    உண்மையான வள்ளல்கள்

    உண்மையான வள்ளல்கள்

    லோகேஷிற்கு காரு கொடுத்தார், பைக் கொடுத்தார், வாட்ச் கொடுத்தார் என்று எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃட் உழைக்கும் மக்கள் விக்ரம் படத்திற்காக கொடுத்த பணம் தான். தினக்கூலிகள் காசு கொடுத்து எனக்காக படம் பார்ர்த்து உள்ளார்கள் உண்மையில் அப்படிவாரிக்கொடுக்க எனக்கு தெரியாது. உண்மையான வள்ளல்கள் மக்கள் தான் என்றார்.

    பாராட்டியே ஆக வேண்டும்

    பாராட்டியே ஆக வேண்டும்

    இந்த மேடையில் உதயநிதி ஸ்டாலினைப்பற்றி நான் பேசியே ஆக வேண்டும், விக்ரம் படத்திற்கு ரூ 75 கோடி ஷேர் வந்து இருப்பதாக உதயநிதி வெளிப்படையாக கூறியுள்ளார். மேடையில் யாரும் இப்படி உண்மையை சொல்ல மாட்டார். ஆனால், உதயநிதி சொல்லியிருக்கிறார் இதை பாராட்டியே ஆகவேண்டும். இந்த நேர்மை இருந்தால், இன்னும் பல கலைஞர்கள் திரைத்துறையில் ஜெயிக்க முடியும் என்றார்.

    எனக்கு நேரமில்லை

    எனக்கு நேரமில்லை

    பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள் படத்தை பாராட்டி இருந்தனர் அவர்களுக்கு எங்களது நன்றி. சிலர் படத்தை விமர்சித்து இருந்தனர் அவர்களின் விமர்சனம் இன்னும் எங்களை செதுக்கும். ஆனால், கேலி, கிண்டல் செய்பவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை நான் வீணாடிக்க மாட்டேன். என் வேலையை நாங்கள் செய்து கொண்டே இருப்போம் என்றார் கமல்ஹாசன்.

    மறக்க முடியாத பயணம்

    மறக்க முடியாத பயணம்

    இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், விக்ரம் மறக்க முடியாத பயணம். ஆடியோ வெளியீடு விழாவில் சிறப்பாக வந்திருப்பதாக கூறினேன். அதை ரசிகர்கள் உண்மையாக்கியுள்ளனர். அதற்கு ரசிகர்களுக்கு நன்றி. கமல் என்ன கிஃப்ட் கொடுத்தார் என கேரளாவில் உசுப்பேற்ற கேட்டனர். விக்ரம் படம் கிஃப்ட் என கூறினேன் என்றார்.

    English summary
    vikram, Director Lokesh Kanagaraj, Red Giant Movies, Kamal Haasan, Vijay sethupathi, Fahadh Faasil, Arhundas, Suriya, vikram Collection, vikram Tamil nadu collection, vikram success meet, Udhayanithi, Lokesh Kanagaraj, Kamal Haasan, Kamal Haasan speech, விக்ரம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், அர்ஹன்தாஸ், சூர்யா, விக்ரம் கலெக்‌ஷன், விக்ரம் தமிழ்நாடு வசூல், விக்ரம் வெற்றி சந்திப்பு, உதயநிதி, லோகேஷ் கனகராஜ் பேச்சு, கமல்ஹாசன் பேச்சு
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X