twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’விக்ரம் ஏஜெண்ட் டீனா’ வசந்தியின் விடாமுயற்சியை பாராட்டிய தூரிகை..தற்கொலை முடிவை நாடியது ஏன்?

    |

    கவிஞர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பெண்கள் பிரச்சினைகள் பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் தூரிகை.

    தன் பேச்சிலும் எழுத்திலும் தைரியமான பெண்ணாக உலா வந்த தூரிகையின் தற்கொலை முடிவை அவரது நண்பர்களே ஏற்க மறுக்கின்றனர்.

    தூரிகை விக்ரம் படத்தில் டீனா கேரக்டரில் நடித்த வசந்தியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    பெண்கள் குறித்து பாசிட்டிவாக சிந்தித்த தூரிகை..ஏன் இந்த திடீர் முடிவு?பெண்கள் குறித்து பாசிட்டிவாக சிந்தித்த தூரிகை..ஏன் இந்த திடீர் முடிவு?

    திரைக்கவிஞர் கபிலன்

    திரைக்கவிஞர் கபிலன்

    தமிழ் திரையுலகில் முற்போக்கு கருத்துக்களுடன் பாடல் எழுத வந்தவர் கபிலன். உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா எனும் இருபொருள் படும் புதுமை கவித்துவ வரிகள் மூலம் அனைவரையும் திருபிப்பார்க்க வைத்தவர் கபிலன். தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவது என கபிலன் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.

    தந்தை வழியில் முற்போக்கான பாதை நடந்த தூரிகை

    தந்தை வழியில் முற்போக்கான பாதை நடந்த தூரிகை

    இவரது வழியில் இவரது மகள் தூரிகையும் முற்போக்கு சிந்தனை பெண்ணியவாதியாக வளர்ந்து வந்தார். முற்போக்கு இயக்க தலைவர்கள், திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். முன்னணி இதழ் ஒன்றில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்த தூரிகை தந்தையைப்போலவே சினிமா பக்கமும் தொடர்பில் இருந்துள்ளார்.

    பீயிங் வுமன் டிஜிட்டல் இதழை நடத்தியவர்

    பீயிங் வுமன் டிஜிட்டல் இதழை நடத்தியவர்

    தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் செயல்பட விருப்பம் இல்லாத தூரிகை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்.17 அன்று பீயிங் வுமன் என்கிற பெண்களுக்கான டிஜிட்டல் இதழை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இதில் பெண்களுக்கான ஆக்கபூர்வ பிரச்சினைகள் குறித்து பேட்டிகள் எடுத்து பதிவிட்டு வந்துள்ளார். கடைசியாக கடந்த 1 ஆம் தேதி மெரினாவில் பாலின சமத்துவம் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அதை தனது டிஜிட்டல் இதழில் பதிவிட்டுள்ளார். பீயிங் வுமன் டிஜிட்டல் இதழ் பெரிய அளவில் வெற்றியடைவில்லை. அதில் பெரிதாக கவனமும் செலுத்தவில்லை.

    விக்ரம் 'டீனா' வசந்தியை வாழ்த்தி பதிவு

    விக்ரம் 'டீனா' வசந்தியை வாழ்த்தி பதிவு

    பெண்கள் முன்னேற்றம் குறித்து தனது முகநூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள தூரிகை, விக்ரம் படத்தில் நடித்த டீனா பெரும் பாராட்டைப் பெற்றது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தனது முகநூலில் தூரிகை புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். அவரது பதிவில் "நீங்கள் இன்று நம்பிக்கையற்றவர்களாக உணர்ந்தால், இந்தப் படங்களைப் பார்த்து, நமது காத்திருப்புக்கும் பலன் இருப்பதை நம்புங்கள், நிச்சயமற்ற தன்மையைத் ஆரத்தழுவி அதன் அழகை அனுபவிக்கவும், நல்ல காரியங்கள் நடக்க எப்போதும் நேரம் எடுக்கும். ஹாட்ஸ் ஆஃப் நடிகை வசந்தி" என வாழ்த்தியுள்ளார்.

    வாழ்க்கை ஒருமுறை வாழ்வதும் ஒருமுறை, முற்போக்கு கருத்துகளின் முடிவு இதுவா?

    வாழ்க்கை ஒருமுறை வாழ்வதும் ஒருமுறை, முற்போக்கு கருத்துகளின் முடிவு இதுவா?

    வாழ்க்கையில் முற்போக்கான பல விஷயங்களை பேசியும் எழுதியும் வந்த ஒரு பெண். பெண்களின் உரிமைகளுக்காக சிந்தித்த பெண். நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும், அந்த காத்திருப்பை ரசியுங்கள் என பதிவிட்டவர், எதைக்கண்டு இனி முடியாது என வாழ்க்கையை முடித்துக்கொண்டார். முற்போக்கு கருத்துக்களை பேசுவது, எழுதுவது மட்டுமல்ல வாழ்க்கை அதை கடைபிடிப்பதும் தான் என்பதை ஏனோ உணராமல் வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார் தூரிகை. வாழ்க்கை ஒருமுறைதான் அதை வாழ்ந்துப்பார்க்கும் துணிவு இல்லாமல் போனதை எண்ணி நண்பர்கள் உறவினர்கள் துயரப்படும் நிலை உருவாகியுள்ளது.

    English summary
    Poet Kabilan's daughter hanged herself. thoorigai came to speak and write about women's issues. Even her friends refuse to accept the suicidal decision of thoorigai who strolled as a courageous woman in her speech and writing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X