Thangalaan: தங்கலான் பார்த்த ரசிகர்கள் கோபம்.. பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம்..என்ன நடந்தது?
தூத்துக்குடி: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தினை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தினை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரெடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிக்கெட் தொகையை திரும்பக் கேட்டுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது.
தங்கலான் திரைப்படம், கி.பி. 1890 காலகட்டங்களில் கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினர் என்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட தடங்கல், அதிலிருந்து எவ்வாறு மீண்டு தங்கத்தை எடுக்கின்றனர் என்பதுதான் கதை. இந்தப் படத்தினை பல வரலாற்று பின்னணியில் இருந்து உருவாக்கியுள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படத்தினை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரது நடிப்பும் வசன உச்சரிப்பும் நம்மை கதை நடக்கும் காலத்திற்கே கொண்டு செல்கின்றன. படத்தின் மற்றொரு பலம் என்றால் அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார்தான். இந்தப் படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சிவரை படத்தினை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்.

வசூல் விபரம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இதில் தமிழ்நாட்டில் ரூபாய் 11 கோடிகளுக்கு மேலும், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சேர்த்து கிட்டத்தட்ட ரூபாய் இரண்டு கோடிகளும் என முதல் நாளில் மட்டும் ரூபாய் 13 கோடிகளை தங்கலான் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் இன்னும் ஹிந்தியில் ரிலீஸ் செய்யப்படவில்லை. ஹிந்தியிலும் ரிலீஸ் ஆகியிருந்தால் படத்தின் முதல் நாள் வசூல் 15 கோடிகளுக்கு மேல் இருந்திருக்கும்.

ஆத்திரம்: பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தங்கலான் படத்தினைக் காண, தூத்துக்குடி மாநகரில் மட்டும் 4 திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆனது. இதில் புதிதாக சீரமைத்துக் கட்டப்பட்ட திரையரங்கமான கிளியோபட்ரா திரையரங்கில் காலை 9.30 மணி காட்சி திரையிடப்பட்டது. படத்தினைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் ஆடியோ சரியாக கேட்கவில்லை எனக் கூறி திரையரங்க ஊழியர்களிடம் முறையிட்டுள்ளனர். அனால் ஆடியோ சரிசெய்யப்படாமல் தொடர்ந்து திரையிட்டதால் ரசிகர்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினர்.

வாக்குவாதம்: மேலும் திரையரங்க ஊழியர்களிடமும் நிர்வாகிகளிமுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. படத்தினைப் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்னர் இருந்தே ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து படம் பார்க்க வந்தனர். இப்படியான நிலையில் படத்தின் ஆடியோ சரியாக கேட்காததால் படத்தின் டிக்கெட்டிற்கு வாங்கிய தொகையை திரும்பக் கேட்டு முறையிட்டுள்ளனர். இதனால் திரையரங்கத்தினரும் வேறு வழி இல்லாமல் படத்திற்கான டிக்கெட் பணத்தை திரும்பக் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் கிளியோபட்ரா திரையரங்கம் அமைந்துள்ள பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.



Click it and Unblock the Notifications











