Thangalaan Trailer: டீசரிலேயே மிரட்டிவிட்ட விக்ரமின் தங்கலான் ட்ரைலர் வருது மக்களே.. ரெடியா?

சென்னை: நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவேத்து உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். விக்ரம் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படங்களில் ஒன்றாக இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் படம் லைவ் சவுண்ட் முறையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் தான் இயக்குனராக அறிமுகமான படத்திலிருந்து அம்பேத்கர் பெரியார் மற்றும் காரல் மார்க்ஸின் கருத்துக்களை தனது படங்களில் காட்சிகளாகவோ, குறியீடுகளாகவோ வசனங்களாகவோ தொடர்ந்து வெளிப்படுத்தி வருபவர் இயக்குநர் பா. ரஞ்சித். குறிப்பாக அம்பேத்கரின் கருத்துக்களையும் அவரது சிந்தனைகளையும் தனது படங்களில் குறியீடாகவும் நேரடி காட்சிகளாகவும் வசனங்களாகவும் பல படங்களில் ரஞ்சித் காட்சிப்படுத்தியுள்ளார். இதற்காகவே தமிழ் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் ரஞ்சித்துக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக முற்போக்கு சிந்தனை உடையவர்கள் ரஞ்சித்தின் படத்தினை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Vikram Thangalaan Pa Ranjith

அதேபோல் சமூகநீதி சிந்தனை உள்ள இயக்குநர்களில் ஒருவராக இருக்ககூடிய வெற்றிமாறன் தமிழ் சினிமாவை பிரிக்க வேண்டும் என்றால் அதனை ரஞ்சித்துக்கு முன் ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம் என பொது மேடைகளில் பேசி உள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என்று தான் இயக்கிய அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு சமூக கருத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசி வந்துள்ளார்.

Vikram Thangalaan Pa Ranjith

தங்கலான்: இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். கோலார் தங்கவயலை மைய்யப்படுத்திய இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக இருந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், டிசம்பருக்கு தள்ளிப்போயுள்ளது. அதேநேரத்தில் ஆக்ஸ்ட் 15ஆம் தேதி இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படமான வணங்கான் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று அதாவது ஜூலை 8ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

Vikram Thangalaan Pa Ranjith

ட்ரைலர்: இந்நிலையில் தங்கலான் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் படத்தின் ட்ரைலர் நாளை அதாவது ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை எந்த நேரத்தில் ட்ரைலர் ரிலீஸ் செய்யப்படுகின்றது என்பது குறித்து படக்குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடவில்லை.

Vikram Thangalaan Pa Ranjith

ஜி.வி.: இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை தொடர்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்போதே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் தங்கலான் படம் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் 15ஆம் தேதி வணங்கான் படமும் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. இந்த இரண்டு படங்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதனால் இவரது இசையில் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இரண்டு இயக்குநர்களும் தரமான படங்களை படைத்து வரும் இயக்குநர்களாக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X