Thangalaan: 5000 தியேட்டர்கள்.. அசால்ட்டாக 100 கோடிகளை அள்ளும்.. ஹிந்தியில் லேட் ரிலீஸ் - தனஞ்ஜெயன்

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.மேலும் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு மெட்ரோ நகரங்களுக்கு பயணித்து வருகின்றது.

மெட்ரோ நகரங்களுக்குச் செல்லும் படக்குழு, அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்லி வருகின்றனர். மேலும் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது எனவும் கூறி வருகின்றனர். தங்கலான் படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது. இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்.

Thangalaan Vikram Pa Ranjith

இந்நிலையில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரஸ்யாமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், தங்கலான் படத்தினை தமிழ்நாடு, கேரளா, அந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் குறைந்தது 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதேபோல், படத்தினை வெளிநாடுகளில் மட்டும் 1000 தியேட்டர்களுக்கு மேல் ரீலீஸ் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தியில் படத்தினை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என இருக்கின்றோம். அங்கு இருக்கும் விநோகிஸ்தர்கள் ஏற்கனவே ஆகஸ்ட் 15 தினத்தில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதால், தங்கலான் படத்தினை இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்கள்.

தள்ளிப்போகும் ஹிந்தி ரிலீஸ்: எனவே இந்தியில் மட்டும் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஒரு வாரம் கழித்தோ அல்லது இரண்டு வாரங்கள் கழித்தோ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே இதேபோல் காந்தாரா படம் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் செய்தது. அதேபோல் தங்கலான் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றோம்.

100 கோடி வசூல்: படம் அசால்ட்டாக ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்யும். குறிப்பாக விடுமுறை தினமான முதல் நான்கு நாட்களிலேயே அசால்ட்டாக ரூபாய் 50 கோடிகளை வசூல் செய்யும். அதேபோல், படம் நிச்சயமாக சர்வசாதாரணமாக ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்துவிடும். ஆகஸ்ட் 15இல் டிமாண்டி காலணி 2 படமும், ரகுதாதா படமும் வருகின்றது. இந்த படங்களுக்கான வரவேற்பு என்பது கட்டாயம் இருக்கும். அதேபோல்தான் தங்கலான் படமும்.

கமெர்ஷியல்: தங்கலான் படத்தில் விக்ரம் சார் இருக்கின்றார். மிகப்பெரிய இயக்குநர் ரஞ்சித் இருக்கின்றார். இவர்கள் இருவரும் இணைந்து கமெர்ஷியலான படமாகவும் அதேநேரத்தில் எடுத்துக்கொண்ட கதைக்கு நியாயம் கற்பிக்கும் விதமாகவும் படத்தை எடுத்துள்ளனர்” என பேசியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X