“விக்ரம்“ தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி!
சென்னை : விக்ரம் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை தமிழகத்தில் வசூலாகி உள்ள தொகை குறித்து சென்னையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

இங்கிலீஸ் படம் போல இருக்கு
விக்ரம் வெற்றி பெற்றதை அடுத்து சென்னையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை முதன் முதலில் பார்த்தது நான் தான் என்றார். படத்தை பார்த்துவிட்டு கமல் சாரிடம், படம் இங்கிலீஸ் படம் போல இருக்கு படம் நிச்சயம் வெற்றி பெரும் என்றேன். ஆனால், இந்த அளவுக்கு வெற்றி பெரும் என்று நினைக்கவில்லை.

7 முறை பார்த்தேன்
விக்ரம் படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வந்து பார்த்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் நானே படப்பிடிப்பை முடித்து விட்டு, ஓய்வு கிடைக்கும் நேரத்தில் விக்ரம் படத்தை பார்க்கிறேன். இதுவரை 7 முறைப்பார்த்து படத்தை பார்த்து விட்டேன் என்றார்.

தமிழக வசூல்
விக்ரம் திரைப்படம் வெளியாகி 3 வாரங்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை வசூலாகி உள்ளது ரூ.75 கோடியை தாண்டி போய்கொண்டு உள்ளது. இது வரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சியுடன் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

மகத்தான வசூல்
விக்ரம் திரைப்படம் வரும் திங்கட் கிழமைக்குள் ஓவர்சீஸ் வசூல் மட்டும் ரூ.100 கோடியை செய்துவிடும் என்றும் இதுவரை, வெளியான எந்த ஒரு டாப் நடிகர்களின் திரைப்படமும் இந்தளவிற்கு ஓவர்சீஸ்-ல் வசூல் செய்யவில்லை டிஸ்டிபூட்டர் சஞ்சய் தெரிவித்தார். மேலும் கேரளாவில் 35 கோடி வசூலாகி உள்ளது . இப்படம் உலகம் முழுவதும், இதுவரை ரூ. 317 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இன்னும் வரும் வாரங்களில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











