குட் நியூஸ்.. விரைவில் தாத்தா ஆகிறார் விக்ரம்.. சந்தோஷத்தில் சியான் குடும்பம்!

சென்னை: சியான் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப் போகிறார் என்ற சந்தோஷமான செய்தி ஒன்று கசிந்திருக்கிறது.

Recommended Video

Unreleased Big Budget Tamil Movies | Dhuruva Natchathiram, Marudhanayagam

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் சியான் விக்ரம்.

நடிகர் விக்ரமை தொடர்ந்து அவரது மகனும் ஹீரோவாகி விட்டார். விரைவில் இருவரும் இணைந்து நடிக்கவும் உள்ளனர்.

54 வயசு

54 வயசு

1966ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பிறந்த நடிகர் விக்ரமுக்கு தற்போது 54 வயதாகிறது. 1992ம் ஆண்டு ஷைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். த்ருவ் விக்ரம், அக்‌ஷிதா என இரு குழந்தைகள் தற்போது வளர்ந்து பெரியவர்களாக உள்ளனர். த்ருவ் விக்ரம் நடிகராகவும், அக்‌ஷிதா பெரிய இடத்து மருமகளாகவும் உள்ளார்.

பெரிய இடத்தில் சம்மந்தம்

பெரிய இடத்தில் சம்மந்தம்

கடந்த 2017ம் ஆண்டு விக்ரம் மகள் அக்‌ஷிதாவுக்கும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனோரஞ்சித்துக்கும் திருமணம் நடைபெற்றது. கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியினரின் மகன் தான் மனோரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தாத்தா

விக்ரம் தாத்தா

ஒட்டுமொத்த ரசிகர்களும் சியான் விக்ரம் என செல்லமாக நடிகர் விக்ரமை அழைத்து வரும் நிலையில், நடிகர் விக்ரமை தாத்தா என்றழைக்க, விரைவில் பேரக் குழந்தை பிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் குடும்பத்தினர் சூழ சின்ன ஃபங்க்‌ஷன் ஒன்றும் நடைபெற போகிறதாம்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

குடும்பத்தில் தாத்தா ஆனாலும், கோலிவுட்டில் சியான் விக்ரம் எப்போதுமே யங் ஹீரோ தான். கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், சியான் 60 என விக்ரமின் தரமான படங்களுக்கு அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் த்ருவ் விக்ரமுடனும் இணைந்து நடிக்கப் போகிறார் விக்ரம்.

More from Filmibeat

Read more about: vikram விக்ரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X