25 விதமான மேக்கப்.. சீரியஸ் ஆலோசனை... உலக நாயகனுக்கு செக் வைக்கும் சீயான்!

By Staff

Recommended Video

விக்ரம்-க்கு இருக்கும் தைரியம் வேற யாருக்கும் இல்ல Kamal Haasan | Kadaram Kondan Trailer Launch

சென்னை: கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில், வேறொரு ஹீரோவை வைத்து ஒரு படம் எடுப்பது உறுதியானது. ஒரு கதையை ரெடி பண்ணி 'தூங்கா வனம்' இயக்குநர் ராஜேஷ் கொடுக்க, அதன் ஹீரோ பாத்திரத்துக்கு சில நடிகர்களின் பெயரை எழுதி, அவர்களின் ப்ரொஃபைலுடன் கமலிடம் கொடுத்தனர் உதவியாளர்கள்.

ஆனால் அந்த ஃபைலை பார்க்காமலே துண்டுச்சீட்டில் ஒரு பெயரை எழுதி கொடுத்தார் கமல். அது 'விக்ரம்'. அப்படித்தான் கடாரம் கொண்டானில் அவர் நுழைந்தார். ஹாலிவுட் லெவல் ஆக்‌ஷன் படமான அந்தப் படத்தில் சீயானின் உழைப்பு வழக்கம்போலவே வேற லெவல் வெறித்தனம். ஆனால் அவரது இயல்பான ராசிப்படி படம் ஓடவில்லை.

கமலுக்கு சற்று வருத்தம், சீயானுக்கோ பெரும் வருத்தம். கமலை சந்திக்க விக்ரம் டைம் கேட்டு, 'இப்போ வேணாம். இருவரும் சங்கடங்களை மட்டுமே பகிர்வோம். பின்னொரு முறை பார்ப்போம்.' என்று கமல் தவிர்த்துவிட்டதாக கோலிவுட்டில் ஒரு டாக் இருக்கிறது.

புதுப் படம்

புதுப் படம்

இந்த நிலையில் அடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் பிரதான பாத்திரத்தில் விக்ரம் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாக ‘டிமாண்டி காலனி' பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் புதிய ஸ்பெஷல் படமொன்றில் கமிட் ஆகி, நடித்துக் கொண்டிருக்கிறார் விக்ரம்.

அடேங்கப்பா

அடேங்கப்பா

இதில் அவருக்கு குவாட்டர் சதம் கெட் அப்புகள். ஆம், இருபத்தைந்து விதமான கெட் அப்புகளில் நடிக்கிறார் சீயான். இது வரையில் ஒரு நடிகர் ஒரே படத்தில் இப்படி இருபத்தைந்து கெட்டப்புகளில் நடித்ததில்லை, இது உலக சாதனை! என்று இப்போதே சீயானை கொண்டாட துவங்கிவிட்டது கோடம்பாக்கம்.

கடாரம் கொண்டான் கடுப்புகள்

கடாரம் கொண்டான் கடுப்புகள்

குறும்புக்கார இளம் இயக்குநர்களோ ‘கடாரம் கொண்டான் கடுப்புகளால், கமலை ஓவர் டேக் பண்ணவே விக்ரம் இப்படி மெனெக்கெட்டு 25 கேரக்டர்களில் நடிக்கிறார். தசாவதாரத்தை டபுள் டைம் ஓவர் டேக் பண்ணும் முயற்சி இது. எல்லாம் போட்டி, பழிவாங்கல்.' என்கிறார்கள்.

அலட்டிக்காத விக்ரம்

அலட்டிக்காத விக்ரம்

ஆனால் இதையெல்லாம் பற்றி அலட்டிக்காமல், அஜன் ஞானமுத்து மற்றும் சீயான் கூட்டணியோ ஹாலிவுட் மேக் -அப் வல்லுநர்களுடன் 25 விதமான மேக் - அப்களுக்காக சீரியஸ் ஆலோசனையில் இருக்கிறது.

மதுரை வீரந்தானே.. இவனை உசுப்பி விட்ட நீயே.. இனி விசிலு பறக்கும் தானே... சீயான் சீயான் தான்!

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X