கடாரம் கொண்டானால் சம்பளத்தை ரூ. 4 கோடி உயர்த்தும் விக்ரம்?
Recommended Video
சென்னை: கடாரம் கொண்டான் பட வெற்றியை அடுத்து தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளாராம் விக்ரம்.
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல் ஹாஸன் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ஹிட்டாகியுள்ளது. ரொம்ப நாள் கழித்து விக்ரமுக்கு ஒரு ஹிட் கிடைத்துள்ளது.

கடாரம் கொண்டான் படத்தை பார்த்த அனைவரும் விக்ரமின் நடிப்பை பாராட்டியுள்ளனர். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இன்ப அதிர்ச்சி அளிக்குமாறு விக்ரமுக்கு அவரின் ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்ரம் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 14 கோடி சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் கடராம் கொண்டான் வெற்றி அடைந்ததை பார்த்த அவர் தனது சம்பளத்தை ரூ. 18 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம்.
விக்ரம் தற்போது இமைக்கா நொடிகள் படம் புகழ் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போதைக்கு விக்ரம் 54 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே வித்தியாசமாக இருந்தது. விக்ரம் 54 படத்தில் சீயான் புகைப்படக் கலைஞராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறாராம்.
இது தவிர விக்ரம் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் நடிக்கிறார். அந்த படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றப் போகிறார் விக்ரம். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளார் அவர். மணிரத்னத்திடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் ஆவலிலும் உள்ளார் சீயான்.
முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று யாருக்குமே தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











