என்னது விக்ரம் 20 ரோல்ல நடிக்கிறாரா? வாயை பிளக்க வைக்கும் ’சியான் 58’ அப்டேட்!

சென்னை: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சியான் 58' படம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தசாவதாரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருந்த நிலையில், அதற்கு இரு மடங்கு மேலே சென்று 20 வேடங்களில் விக்ரம் இந்த படத்தில் நடித்து வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

‘சியான் 58’

‘சியான் 58’

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58வது படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் உருவாகி வருகிறது. வயாகாம் 18 ஸ்டூயோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

கே.ஜி.எஃப் நாயகி

கே.ஜி.எஃப் நாயகி

கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் நாயகியாக நடித்திருந்த ஸ்ரீனிதி ஷெட்டி இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கே.எஸ். ரவிக்குமார், பிரதீப் ரங்கநாதன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலரும் ‘சியான் 58' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

விக்ரம் மகன் ஆதித்ய வர்மா படம் நேற்று ரிலீசானது. அர்ஜுன் ரெட்டியை நேர்மையாக ரீமேக் செய்திருப்பதாகவும், த்ருவ் விக்ரமின் நடிப்பு அபாரம் என்றும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மகன் படத்தின் ரிலீஸ் புரொமோஷனில் பிசியாக இருந்த விக்ரம், மீண்டும் தனது படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

20 ரோல்

20 ரோல்

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். அதனை முறியடிக்கும் வகையில் தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களில் மிகப்பெரிய முயற்சியை செய்து காட்டினார். இந்நிலையில், 'சியான் 58' படத்தில் விக்ரம் 20 வேடங்களில் நடித்து வருவதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கர மோதல்

பயங்கர மோதல்

விக்ரமின் 58வது படமும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி 64, சூர்யாவின் சூரரைப் போற்று, அஜித்தின் வலிமை மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளதால், தமிழ் சினிமாவில் பயங்கர மோதல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: vikram விக்ரம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X