தூசு தட்டப்படும் மருதநாயகம்.. கமலுக்குப் பதில் விக்ரம்.. இதுவாவது ஒர்க் அவுட் ஆகுமா?
மருதநாயகம் படத்தை விக்ரமை ஹீரோவாக வைத்து எடுக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: மருதநாயகம் படத்தில் கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் கனவு படங்களில் மிகவும் முக்கியமானது மருதநாயகம். கடந்த 1997ம் ஆண்டும் தொடங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட் அதிகரித்ததால் கைவிடப்பட்டது. தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் என எதிப்பார்த்திருந்த இந்த படம் கைவிடப்பட்டதில் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.
தற்போது தமிழ் சினிமாவில் சூழல்கள் மாறியிருக்கின்றன. பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு, லாபமும் சம்பாதிக்கின்றன. இதற்கு முக்கிய எடுத்துக்காட்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படம்.

மருதநாயகம்
தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியலை பேசும் அசுரன் போன்ற படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இடம்பெற்றிருப்பதும் நம்பிக்கை கீற்றுகளை பாய்ச்சியிருக்கிறது. இதனால் மருதநாயகம் படத்தை தூசி தட்டும் ஆலோசனையில் இறங்கி இருக்கிறார் கமல்.

தீவிர அரசியல்
ஆனால் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால், தன்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். மற்ற நடிகர்களை வைத்து தனது கனவை நனவாக்கிக்கொள்ள கமல் தன்னை தயார்ப்படுத்தி வருகிறார். இதனை சமீபத்திய பேட்டியில் அவர் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

கமல் இயக்கம்
எனவே, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம், மற்ற தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. கமல்ஹாசன் தான் இப்படத்தை இயக்கப் போகிறார். ஏற்கனவே படத்தின் 30 நிமிடங்கள் படமாக்கப்பட்டு விட்டன.

விக்ரம்
இதனால், மருதநாயகம் படத்தில் கமலுக்கு பதிலாக நடிக்க போவது யார் எனும் கேள்வி நீடித்து வந்தது. இந்த கேள்விக்கு பதிலாக, கமல் ரோலில் விக்ரம் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கமல் ரசிகர்களும், சீயான் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடாரம் கொண்டான்
ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தில் விக்ரமின் நடிப்பை கமல் வெகுவாகப் பாராட்டி இருந்தார். எனவே விக்ரமை ஹீரோவாக வைத்து இந்த படத்தை மீண்டும் எடுக்க கமல் விரும்புவதாகவே தெரிகிறது.

கமலின் நம்பிக்கை
பட்ஜெட் எகிறினாலும், விக்ரமின் மார்க்கெட் அதை தாங்கும் என கமல் நம்புகிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. ஒருவேளை இது சாத்தியமானால், சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிப்பான் 'மருதநாயகம்'.

படமாக்கப்பட்ட காட்சிகள்
ஏற்கனவே 30 நிமிடங்கள் படமாக்கப்பட்டு விட்டதால், 12 வருடங்களுக்குப் பிறகு என்று தான் மீதிப்படம் படமாக்கப்பட இருக்கிறது. எனவே, கமலை வைத்து படமாக்கப்பட்ட காட்சிகளும் படத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











