twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனில் விக்ரம் பிசி.. மார்ச்சில் மீண்டும் ரஷ்யா செல்லும் 'கோப்ரா' டீம்!

    By
    |

    சென்னை: விக்ரம் நடிக்கும் கோப்ரா டீம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரஷ்யாவுக்கு மீண்டும் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

    டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர், அஜய் ஞானமுத்து.

    தீராத பஞ்சாயத்து.. தவறை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில்.. இன்றும் வாங்கிக்கட்டும் பாலாஜி! தீராத பஞ்சாயத்து.. தவறை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில்.. இன்றும் வாங்கிக்கட்டும் பாலாஜி!

    இவர் அடுத்து இயக்கும் படம் கோப்ரா. விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இது அவருக்கு 58-வது படம்.

    ஸ்ரீநிதி ஷெட்டி

    ஸ்ரீநிதி ஷெட்டி

    கதாநாயகியாக, ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர் கே.ஜி.எப் படத்தில் நடித்தவர். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ், மிருளானி ரவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

    தெலுங்கு, இந்தி

    தெலுங்கு, இந்தி

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அனைத்து மொழிக்கும் ஏற்றது போல டைட்டில் வேண்டும் என்பதால் கோப்ரா என்று வைக்கப் பட்டுள்ளது. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் டைட்டிலுக்கும் விக்ரம் கேரக்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று இதன் அஜய் ஞானமுத்து கூறியிருந்தார்.

    எழுத்து எண்கள்

    எழுத்து எண்கள்

    இதின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இதன் இரண்டாவது லுக் சமீபத்தில் வெளியானது. விக்ரம் முகத்தின் ஒரு பகுதி, எழுத்துகளும் எண்களும் சிதறிக் கிடப்பது போலான தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    கொரோனா பரவல்

    கொரோனா பரவல்

    இந்தப் படத்தின் ஷூட்டிங், ரஷ்யாவில் நடந்த போதுதான் கொரோனா பரவல் அதிகமானது. இதனால் அங்கிருந்து படக்குழு திரும்பி வந்தது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. பிறகு திடீரென நிறுத்தப்பட்டது. விக்ரம் இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

    மீண்டும் ரஷ்யா

    மீண்டும் ரஷ்யா

    ஐதராபாத்தில், இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு மேல் அங்கு ஷூட்டிங் நடக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் கோப்ரா டீம், ரஷ்யாவுக்கு மீண்டும் செல்லும் என்றும் இன்னும் 30 நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Cobra' director Ajay Gnanamuthu is planning to resume shooting in Russia by March or April. Reports are that about 30 to 35 days of shooting is pending.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X