விக்ரம் - வேதா படத்தின் 4வது ஆண்டு கொண்ட்டாம்...புஷ்கர்-காயத்ரியின் சிறப்பான படம்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சிறப்பான படமாக வெளியானது விக்ரம் வேதா.
புஷ்கர் -காயத்ரியின் சிற்பபான டைரக்ஷனில் வெளியான இந்த படம் சிறப்பான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை தற்போது கடந்துள்ளது.

புஷ்கர் -காயத்ரி இயக்கம்
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் அதிரடி நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகளை தற்போது கடந்துள்ளதை படக்குழு கொண்டாடி வருகிறது.

போட்டி போட்ட நடிப்பு
கடந்த 2017 ஜூலை 21ம் தேதி இந்த படம் வெளியானது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்தது. விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இருவரும் போட்டிப் போடடு கொண்டு நடித்திருந்தனர். போலீஸ் மற்றும் கேங்ஸ்டர் வேடங்களில் இருவரும் நடித்திருந்த நிலையில் இருவரும் கதையில் கெட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறப்பான பாடல்கள்
நடிகர் கதிர், வரு சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தருந்தனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்திருநதார். பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் இந்த படம் தற்போது நான்கு ஆண்டுகளை கடந்துள்ளது.

படக்குழு கொண்டாட்டம்
இதுகுறித்து படக்குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் சிறப்பான படமான வெளியான இந்த படம் தற்போது இந்தியிலும் படமாக்கப்பட உள்ளது. ஹிரித்திக் ரோஷன் மற்றும் சாயிப் அலிகான் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











