'விக்ரம் வேதா' நடிகருக்கு நாளை திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

'விக்ரம் வேதா' நடிகருக்கு நாளை திருமணம்!

ஈரோடு : 'விக்ரம் வேதா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கதிருக்கு, நாளை திருமணம் நடைபெற இருக்கிறது.

ஈரோட்டை சேர்ந்தவர் கதிர். மதயானை கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கிருமி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் வாசுதேவன், ஜெயந்தி தம்பதிகளின் மகள் சஞ்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

‘மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கதிர். தொடர்ந்து ‘கிருமி', ‘என்னோடு விளையாடு', ‘விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘சத்ரு', ‘பரியேறும் பெருமாள்', ‘சிகை' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொழிலதிபர் மகள்

தொழிலதிபர் மகள்

கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசுதேவன் - ஜெயந்தி தம்பதிகளின் மகளான சஞ்சனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நாளை (4-ம் தேதி) ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சென்னையில் வரவேற்பு

சென்னையில் வரவேற்பு

முதல்நாளான இன்று, பெருந்துறை மேட்டுக்கடையில் உள்ள ஸ்ரீதங்கம் மஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியாக நடைபெற உள்ளது.

உறவுக்காரர் அல்ல

உறவுக்காரர் அல்ல

"இது காதல் திருமணம் அல்ல. பெற்றவர்களாக பார்த்து நிச்சயித்த திருமணம். மணப்பென் உறவுக்காரரும் அல்ல. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது" எனக் கூறியிருக்கிறார் கதிர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X