twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொன்னியின் செல்வனை வீழ்த்த முடியாது.. விக்ரம் வேதா இயக்குநரே இப்படி சொல்லிட்டாரே!

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படத்துடன் விக்ரம் வேதா இந்தி திரைப்படம் செப்டம்பர் 30 முதல் திரையரங்குகளில் மோதுகிறது.

    கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு இந்தி பெல்டில் மிகப்பெரிய வசூல் அமையவில்லை. ஆனால், பொன்னியின் செல்வன் படத்துக்கு இந்தியிலும் வசூல் பெறவேண்டியது கட்டாயமாக உள்ளது.

    அதற்கு தடையாக புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடித்துள்ள விக்ரம் வேதா நிச்சயம் இருக்கும் என தெரிகிறது.

    அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் படத்தை முந்திய பொன்னியின் செல்வன்..அடுத்த டார்கெட் விக்ரம் படம்தான்! அமெரிக்காவில் விஜய்யின் பீஸ்ட் படத்தை முந்திய பொன்னியின் செல்வன்..அடுத்த டார்கெட் விக்ரம் படம்தான்!

    விக்ரம் வேதா ரீமேக்

    விக்ரம் வேதா ரீமேக்

    புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து கொண்டாடி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து வரும் நிலையில், ஹ்ரித்திக் ரோஷன் இந்த படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளார்.

    பெரிய பட்ஜெட்

    பெரிய பட்ஜெட்

    தமிழில் விக்ரம் வேதா திரைப்படம் மொத்தமே 13 கோடி ரூபாயில் தான் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான், ராதிகா ஆப்தே என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் 175 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பொன்னியின் செல்வன் உடன் போட்டி

    பொன்னியின் செல்வன் உடன் போட்டி

    செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் வேதா திரைப்படங்களுக்கு இடையே இந்தி பெல்ட்டில் மிகப்பெரிய போட்டி நிலவும் என்பது கன்ஃபார்ம். ரீமேக் படமான விக்ரம் வேதா படத்துக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா? அல்லது வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா என எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.

    பொன்னியின் செல்வனை வீழ்த்த முடியாது

    பொன்னியின் செல்வனை வீழ்த்த முடியாது

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய விக்ரம் வேதா இயக்குநர் புஷ்கரிடம் விக்ரம் வேதா, பொன்னியின் செல்வன் என இரு பெரிய படங்கள் இந்த வெள்ளிக்கிழமை வருகிறது. அந்த படத்துடன் மோதி வெல்ல முடியுமா? என்கிற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த புஷ்கர், பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட படம், தமிழர்களின் பெருமை அதனை வீழ்த்த முடியாது என்று பேசியதும் ஹ்ரித்திக் ரோஷனின் ரியாக்‌ஷனே மாறிவிட்டது.

    இரண்டு படங்களும் பாருங்க

    இரண்டு படங்களும் பாருங்க

    பொன்னியின் செல்வன் படத்துடன் மோதல் எல்லாம் இல்லைங்க, இரண்டு படங்களையும் பாருங்க, பொன்னியின் செல்வன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்க முதலில் எங்க படத்தை பாருங்க, முதலில் பொன்னியின் செல்வன் படம் பார்க்குறவங்க அடுத்து வார இறுதி நாட்களில் விக்ரம் வேதா படம் பார்க்க வாங்க என்று இயக்குநர் சொன்னதும் தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு மூச்சே வந்தது. பின்னர் சைஃப் அலி கானும், ஹ்ரித்திக் ரோஷனும் இணைந்து கொண்டு இரண்டு படங்களையுமே பாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

    English summary
    Vikram Vedha director Pushkar epic reply to Ponniyin Selvan part 1 and Vikram Vedha clash.He told, We can't beat Ponniyin Selvan its a historical movie, at the same time fans will watch both the movies and definitely will enjoy our film in theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X