விக்ரம் வேதா இந்தி ரீமேக் இல்லையா? வெப்சீரிஸ் இறங்கும் புஷ்கர் காயத்ரி... ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயின்

By

சென்னை: புஷ்கர் காயத்ரி இயக்கும் வெப்சீரிஸில் நடிகர் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.

சினிமா பிரபலங்கள் இப்போது வெப் சீரிஸூக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா உட்பட பலரும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.

நடிகர்களும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் வெப் சீரிஸில் நடிக்கின்றனர்.

முதன்முறையாக

முதன்முறையாக

மதயானைக் கூட்டம் படத்தில் அறிமுகமானவர் கதிர். தொடர்ந்து கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில், ஜடா படங்களில் நடித்தார். இப்போது சில படங்களில் நடித்துவரும் கதிர், முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்கிறார்.

நம்ம வீட்டுப் பிள்ளை

நம்ம வீட்டுப் பிள்ளை

இதில் ஹீரோயினாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர், காக்கா முட்டை, குற்றமே தண்டனை, தர்மதுரை, கனா, நம்ம வீட்டுப்பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர். இப்போது வானம் கொட்டட்டும், இது வேதாளம் சொல்லும் கதை உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்.

புஷ்கர் காயத்ரி

புஷ்கர் காயத்ரி

இந்த வெப்சீரிஸை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஓரம்போ, வா குவார்ட்டர் கட்டிங், மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படங்களை இயக்கியவர்கள். இதில் 2017 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படம் சூப்பர் ஹிட்டானது.

விக்ரம் வேதா

விக்ரம் வேதா

தமிழில் ஹிட்டான இந்தப் படத்தை இந்தியில் இயக்க புஷ்கர் காயத்ரி திட்டமிட்டிருந்தனர். சில ஹீரோக்கள் முதலில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் அவர்கள் பின் வாங்கிவிட்டனர். இதனால் இந்தியில் இவர்கள் இயக்குவது தள்ளிக் கொண்டே போனது.

அமேசான் தயாரிப்பு

அமேசான் தயாரிப்பு

இதையடுத்து அவர்கள் வெப்சீரிஸை இயக்க உள்ளனர். வழக்கமாக, வெளியில் தயாரிக்கப்படும் தொடரை வாங்கி வெளியிடும் அமேசான் நிறுவனம், இந்த வெப்சீரிசை முதன்முறையாக தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X