Don't Miss!
- Finance
கோதுமை, சர்க்கரையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா?
- Sports
"ஹர்ஷல் பட்டேல் ஒரு ஜோக்கர்" பதற்ற சூழலிலும் ஆர்சிபி தப்பியதன் வியூகம் என்ன.. டூப்ளசிஸ் கூறிய உண்மை
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விக்ரம் வேதா ஃபஸ்ட்லுக் எப்படி இருக்கும் ...ஆர்வத்தில் இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்
மும்பை : விஜய் சேதுபதி - மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் 2017 ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பல விருதுகளை பெற்றது. இந்நிலையில் இந்த படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
தமிழில் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் இந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். மாதவன் நடித்த விக்ரம் கேரக்டரில் சைஃப் அலிகான் நடிக்கிறார். பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ள ஹிருத்திக் தனது 48 வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார்.
நீளும்
பட்டியல்...
நடிகர்
விஷ்ணு
விஷாலும்
கொரோனாவால்
பாதிப்பு

நாளை ஃபஸ்ட்லுக் வெளியீடு
இந்நிலையில் ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நாளை விக்ரம் வேதா படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் க்ளிம்ப்சை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தான் இந்தியிலும் ரீமேக் செய்கிறார்கள். 2022 ம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தமிழில் விக்ரம் வேதா படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இருவரின் முகம் பிளாக் அன்ட் ஒயிட்டில் பென்சில் பெயிண்டிங்கில் வரையப்பட்டது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் இந்தியில் ஃபஸ்ட்லுக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

டிரெண்டிங்கில் விக்ரம் வேதா
இதனால் நாளை ஃபஸ்ட்லுக் வெளியாகும் தகவலை படக்குழுவினர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததுமே, #VikramVedha, #HrithikRoshan, #SaifAlikhan போன்ற ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன.

ஆக்ஷன் த்ரில்லர் படம்
விக்ரம் வேதா படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அபுதாபியிலும், பிறகு 19 நாட்கள் லக்னோவிலும் நடத்தப்பட்டது. இந்த படத்தில் ராதிகா அப்தே முக்கிய ரோலில் நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை Tseries மற்றும் ரியலைன்ஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தியில் எப்படி இருக்கும்
விக்ரம் வேதா, தமிழில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதனால் இந்தியில் இந்த படம் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். நாளை வெளியிடப்படும் ஃபஸ்ட்லுக்கில் ஹிருத்திக் ரோஷன் மட்டும் இருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்படும் என கூறப்படுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.