வாரேவா.. இந்தியில் ரீமேக்காகும் விக்ரம் வேதா.. முதன்முறையாக இணையும் நடிப்பு அசுரன்கள்!

மும்பை: புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா இந்தியில் ரீமேக் ஆகப் போவது உறுதியாகி விட்டது.

இதுவரை இணைந்து நடிக்காத பாலிவுட்டின் நடிப்பு அசுரன்களான ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

தீபிகா படுகோனே உடன் ஃபைட்டர் படம், க்ரிஷ் 4, நெட்பிளிக்ஸ் படம் என ஏகப்பட்ட படங்களில் பிசியாகி உள்ள ஹிரித்திக் ரோஷன் விக்ரம் வேதா படத்தை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டி உள்ளாராம்.

வெறித்தனமான படம்

வெறித்தனமான படம்

கடந்த 2017ல் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா இந்தியளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஜய்சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான அந்த படத்தைத் தான் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப் போகின்றனர்.

புஷ்கர் காயத்ரி

புஷ்கர் காயத்ரி

தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே பாலிவுட்டிலும் படத்தை இயக்க உள்ளனர். அதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளும் புதிய தமிழ்ப் படத்தை அவர்கள் இயக்கவில்லை. மாறாக தயாரிப்பு பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர்.

வேதா யாரு

வேதா யாரு

விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேங்ஸ்டர் வேதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரம் வேதா படத்தை பார்த்து ரொம்பவே பிடித்துப் போக அந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அவர் தான் ஆர்வம் காட்டி உள்ளார்.

விக்ரம் இவர் தான்

விக்ரம் இவர் தான்

பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கி வரும் நடிகர் சைஃப் அலி கான் இந்த படத்தில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

முதன்முறையாக

முதன்முறையாக

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட், வெப் சீரிஸில் ஷாகித் கபூர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் என பாலிவுட்டில் ஏகப்பட்ட முதன்முறை சம்பவங்கள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. இதில் கூடுதல் இணைப்பாக ஹிரித்திக் ரோஷனும் சைஃப் அலி கானும் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி உடன் வெளியாகி உள்ளது தான் ஆச்சர்யம். கொரோனா பரவி வரும் காலத்தில் ஷூட்டிங்கை எல்லாம் உரிய நேரத்தில் முடித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 30க்கு படத்தை வெளியிட்டு விடுவோம் என புஷ்கர் காயத்ரி உறுதி அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X