Don't Miss!
- News
சென்னை அண்ணா பல்கலை. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
- Automobiles
இந்த இ-ஸ்கூட்டருல போகும்போது லைசென்ஸ் கையில வச்சிருக்கணும்னு அவசியம் இல்ல! போலீஸ் பிடிச்சாலும் பயப்பட வேண்டாம்
- Finance
உக்ரைன் மீதான போர் எதிரொலி: ரஷ்யாவில் இருந்து வெளியேறுகிறதா மார்க்ஸ் & ஸ்பென்ஸர் நிறுவனம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா... சூடான அப்டேட்!
சென்னை : புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவனின் மிரட்டலான நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா
கேங்ஸ்டர் கதை களத்தில் உருவானது இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று இந்திய அளவில் பலரது பாராட்டுகளையும் பெற்றது
இப்பொழுது விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் இப்பொழுது ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் தெரியவந்துள்ளது.
புது சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்.. மத்த சீரியல் மாதிரி இல்ல.. கதைல பல ட்விஸ்ட் இருக்கு !

முற்றிலும் புதுமையான திரைக்கதை
தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நடிகர் விஜய் சேதுபதியை அடித்துக் கொள்ளவே முடியாது. சமீப காலமாகவே ரசிகர்கள் அனைவரையும் வியப்படைய வைத்து வருகிறது இவரது திரைப்படங்கள் . அந்த வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி,மாதவன் இணைந்து நடித்த திரைப்படம் விக்ரம் வேதா. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம் பல்வேறு சஸ்பென்ஸ் காட்சிகளையும் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதுமையான திரைக்கதையையும் கொண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் வசனங்கள் அதிக பாராட்டுகளைப் பெற்றது. "ஒரு கதை சொல்லட்டுமா சார் " என விஜய் சேதுபதி கூறும் ஒவ்வொரு இடங்களும் பிரமாதமாக இருக்கும்.

விஜய் சேதுபதி ரவுடியாக
விக்ரமாக மாதவன் போலீஸ் அதிகாரி வேடத்திலும், தாதாவாக விஜய் சேதுபதி பிரபல ரவுடியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தனர். விஜய் சேதுபதி மற்றும் மாதவன் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சரிசமமாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது. எந்த ஒரு இடத்திலும் தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான இந்தப் படத்தில் ஷர்த்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஹிந்தியில் ரீமேக்
இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த விக்ரம் வேதா திரைப்படம் இப்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரியே ஹிந்தி ரீமேக்கில் இயக்கி வருகின்றனர். ஹிரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். ஹிரித்திக் ரோஷன் விஜய் சேதுபதியின் வேதா கதாபாத்திரத்திலும், சைப் அலி கான் மாதவனின் விக்ரம் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

அடுத்த வருடம் செப்டம்பரில்
பெரும் எதிர்பார்ப்பில் கடந்த ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. தமிழைப் போலவே ஹிந்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்க அடுத்த வருடம் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.