For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Vikram Vedha Review: தமிழில் தெறிக்கவிட்ட அளவுக்கு இந்தியில் தெறிக்கவிட்டதா? விக்ரம் வேதா விமர்சனம்!

  |

  நடிகர்கள்: ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான், ராதிகா ஆப்தே

  இசை: சாம் சி.எஸ், விஷால் சேகர், சேகர் ரவ்ஜானி மற்றும் விவேக் அகர்வால்

  இயக்கம்: புஷ்கர் காயத்ரி

  Rating:
  3.5/5

  மும்பை: 2017ம் ஆண்டு விஜய்சேதுபதி, மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தை இந்தியிலும் இயக்கி உள்ளனர் கணவன் மனைவி இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி.

  விக்ரமாதித்யன் வேதாளம் கதையின் மாடர்ன் வெர்ஷனாகவே இந்த படத்தை இயக்கி இருப்பார்கள்.

  விக்ரமாக சைஃப் அலி கானும் வேதாவாக ஹ்ரித்திக் ரோஷனும் நடித்துள்ள இந்த இந்தி விக்ரம் வேதா திரைப்படம் திரையில் தெறிக்கவிட்டதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

  கமல் அப்படி..விஜய்சேதுபதி இப்படி..பட்டுனு உண்மையை சொன்ன பார்த்திபன்!கமல் அப்படி..விஜய்சேதுபதி இப்படி..பட்டுனு உண்மையை சொன்ன பார்த்திபன்!

  விக்ரம் வேதா கதை

  விக்ரம் வேதா கதை

  விக்ரம் வேதா படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கதை நன்றாகவே தெரியும். ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் மிரட்டலான போலீஸ் அதிகாரியான விக்ரமிடம் லக்னோவையே தனது காலடியில் கட்டி ஆளும் ஹ்ரித்திக் ரோஷன் திடீரென சரண்டர் ஆவதும் அதன் பின்னர் அவன் சொல்லும் 3 புதிர் கதைகளுக்கும் விடை கண்டு பிடிக்கும் விக்ரம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வது தான் விக்ரம் வேதா படத்தின் கதை.

  மாதவனை மிஞ்சிய சைஃப்

  மாதவனை மிஞ்சிய சைஃப்

  விக்ரமாக இந்த படத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். தமிழில் விக்ரமாக நடித்த மாதவனையே தனது மிரட்டலான நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சைஃப் அலி கான் தனது கதாபாத்திரத்திற்கு முற்றிலுமாக நியாயம் செய்துள்ளார். மனைவி ப்ரியா (ராதிகா ஆப்தே) வேதாவின் வழக்கறிஞர் என்று தெரிந்த பின்னர் கொடுக்கும் ரியாக்‌ஷன் மற்றும் ஒவ்வொரு புதிர் கதையும் புரியும் போது அவர் கொடுத்துள்ள நடிப்பு மிரட்டுகிறது.

  விஜய்சேதுபதி நடிப்பை மிஞ்சினாரா

  விஜய்சேதுபதி நடிப்பை மிஞ்சினாரா

  ஆனால், அதே சமயம் படத்தின் நாயகன் வேதாவாக நடித்துள்ள ஹ்ரித்திக் ரோஷன் விஜய்சேதுபதியின் நடிப்பை மிஞ்சினாரா? என்கிற கேள்விக்கு அவரே இல்லை என்று தான் பதிலளித்துள்ளார். ஆனால், ஹ்ரித்திக் ரோஷன் தனது ஸ்டைலில் வேதாவாக எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்து அசத்தி உள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் காட்டும் ஆக்ரோஷம் எல்லாம் ரியல் கேங்ஸ்டரை பார்ப்பது போல பயமாக இருக்கிறது.

  பிளஸ்

  பிளஸ்

  இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி பாலிவுட்டில் இப்படியொரு பிரம்மாண்ட படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். சாம் சி.எஸ். இந்தி விக்ரம் வேதாவுக்கும் தனது மிரட்டலான பிஜிஎம்மை போட்டு மெர்சலாக்கி உள்ளார். டாப் நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் மற்றும் ராதிகா ஆப்தேவை தாண்டி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

  மைனஸ்

  மைனஸ்

  விக்ரம் வேதா படத்தை பார்த்தவர்களுக்கு எங்கே எந்த ட்விஸ்ட் வரும் கிளைமேக்ஸ் என்ன என்பது தெரிந்து விடும். அவர்களை நிச்சயம் சர்ப்ரைஸ் படுத்த முடியாது. அந்த வேலையை இயக்குநர்களும் செய்யவில்லை. ஆனால், இந்தி ரசிகர்களை பல இடங்களில் ஸ்லோவாக கதையை நகரவிட்டு சற்றே சோதித்து விட்டனர். சில தொய்வுகளை சரி செய்திருந்தால் இன்னமும் இந்தி விக்ரம் வேதா சிறப்பாக அமைந்திருக்கும்.

  English summary
  Vikram Vedha Hindi Remake Review in Tamil (விக்ரம் வேதா இந்தி ரீமேக் விமர்சனம்): Pushkar Gayathri done a good job to their prestigious movie Vikram Vedha. Both Sailf Ali Khan and Hrithik Roshan give their best.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X