Don't Miss!
- News
செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி.. அவருக்கு அடையாளம் கொடுத்ததே ஜெயலலிதா தான்.. செல்லூர் ராஜூ!
- Technology
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- Finance
தங்கம் வாங்க இது சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா.. இன்று விலை எப்படியிருக்கு?
- Sports
1.5 வருட காத்திருப்புக்கு நியாயம் கிடைக்குமா? கே.எஸ்.பரத் vs இஷான் கிஷான்.. யார் விக்கெட் கீப்பர்??
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹ்ரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா டீசர் வெளியானது.. புஷ்கர் காயத்ரி சும்மா மிரட்டியிருக்காங்க!
மும்பை: ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் வேதா படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்கிய இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரியே இந்த படத்தையும் இயக்கி உள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக இதன் ரிலீஸ் தாமதமாகி வந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி விக்ரம் வேதா திரைக்கு வருகிறது.
அமைதி
காக்கும்
சூர்யா
42
தயாரிப்பு
நிறுவனங்கள்..
ரசிகர்களுக்காக
அப்டேட்
போட்ட
சூர்யா..
என்ன
ஆச்சு?

விஜய்சேதுபதி ரோலில் ஹ்ரித்திக்
க்ரிஷ், தூம் 2, வார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிய பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் உருவாகி உள்ளது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தை பார்த்து ரொம்பவே பிடித்துப் போன நிலையில், அவர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.

மாதவன் ரோலில் சைஃப் அலி கான்
இந்தி விக்ரம் வேதா படத்தில் போலீஸ் அதிகாரியாக தமிழில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். இருவரும் மிரட்டும் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. விக்ரம் வேதா படத்தில் வருவதை போல ஒரு கதை சொல்லட்டுமா என வேதா ஆரம்பிக்கும் காட்சிகள் அட்டகாசம்.

புஷ்கர் காயத்ரி மிரட்டல்
விக்ரம் வேதா படத்துக்கு பிறகு தமிழில் பல முன்னணி நடிகர்களை வைத்து படமெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கணவன் மனைவி இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி நேரடியாக பாலிவுட்டில் விக்ரம் வேதா படத்தை எடுத்து முடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு இந்த படம் வருகிறது. புஷ்கர் காயத்ரி கதை மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சுழல் வெப்சீரிஸும் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

ராதிகா ஆப்தே
கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தேக்கு சமீப காலமாக பாலிவுட்டில் பெரிய படங்கள் கிடைக்காமல் இருந்த நிலையில், விக்ரம் வேதா படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் கலக்க போகிறார் ராதிகா ஆப்தே. தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் தான் இந்தியில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
-
லியோ படத்தில் நடிக்க மிஷ்கினுக்கு இவ்வளவு சம்பளமா? அதனால தான் இயக்குனர்கள் எல்லாம் நடிக்கிறாங்களா?
-
TP Gajendran: அந்த பட்ஜெட் பத்மநாபனை மறக்க முடியுமா? டி.பி. கஜேந்திரனின் கலகலப்பான திரைப் பயணம்!
-
திரையுலகில் அடுத்தடுத்து சோகம்... இயக்குநர் டிபி கஜேந்திரன் மறைவு... சோகத்தில் ரசிகர்கள்!