'ஐ' படத்திற்காக 60 கிலோ குறைத்து, 12 மணிநேரம் மேக்கப் போட்ட விக்ரம்
சென்னை: ஐ படத்திற்காக விக்ரம் 60 கிலோ எடையை குறைத்து 12 மணிநேரம் மேக்கப் போட்டுள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் இரண்டு ஆண்டுகளாக நடித்து வந்த ஐ படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
இந்நிலையில் விக்ரம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில்,

விக்ரம்
விக்ரம் அர்ப்பணிப்பு மிக்க நடிகர். ஒரு படத்திற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்த நடிகரை நான் பார்த்தே இல்லை. அவர் இத்தனை ஆண்டுகள் ஆனது குறித்து குறை கூறவில்லை.

மேக்கப்
ஒரு குறிப்பிட்ட கெட்டப்பிற்காக விக்ரம் பல நாட்கள் 12 மணிநேரம் மேக்கப் போட வேண்டி இருந்தது. படத்தில் அவர் மூன்று வித்தியாசமான லுக்கில் வருகிறார்.

120 கிலோ
விக்ரம் ஒரு கெட்டப்பில் 120 கிலோ எடையில் இருக்க வேண்டும். மற்றொன்றில் 60 கிலோவாக இருக்க வேண்டும். இதற்காக அவர் எடையை அதிகரித்து குறைத்தார்.

சீனா
படத்தின் பல காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டன. நாங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

பாட்டு
படத்தில் வரும் ஒரு பாடல் மற்றும் சில சண்டை காட்சிகள் சீனாவில் இரண்டு மாத காலமாக படமாக்கப்பட்டன என்றார் ரவிச்சந்திரன்.

கமல்
தீபாவளிக்கு ரிலீஸாகும் உத்தம வில்லன் படத்திற்காக கமல் ஹாஸன் 4 மணிநேரம் மேக்கப் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











