twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முடிவுக்கு வந்த கமலின் விக்ரம் பட வசூல்...எத்தனை கோடி வசூல் தெரியுமா?

    |

    சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' படம் ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    Recommended Video

    Rajini and Kamal | இப்பவும் இப்படி மிரட்டுறாங்களே! *Kollywood

    விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு, பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் முதல் நாளிலேயே தமிழகத்தில் ரூ.25 கோடிகளை வசூல் செய்தது.

    இந்த படம் சமீபத்தில் ஓடிடி.,யிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இருந்தாலும் தியேட்டர்களில் பார்க்கவே ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வந்தனர். இதில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

    “கமல் சார் தான் ரியல் ஹீரோ”: விக்ரம் படத்துக்கு நாகர்ஜுனா கொடுத்த சூப்பர் விமர்சனம் இதுதான் “கமல் சார் தான் ரியல் ஹீரோ”: விக்ரம் படத்துக்கு நாகர்ஜுனா கொடுத்த சூப்பர் விமர்சனம் இதுதான்

    75 வது நாளை நிறைவு செய்த விக்ரம்

    75 வது நாளை நிறைவு செய்த விக்ரம்

    விக்ரம் படம் தியேட்டர்களில் ரிலீசாகி சமீபத்தில் தான் 75வது நாளை நிறைவு செய்தது. இதை கொண்டாடும் விதமாக மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதையும் ரசிகர்கள் வைரலாக்கி, டிரெண்டாக்கினர். ஜுன் மாத இறுதியிலேயே 155 கோடிகளை வசூல் செய்த விக்ரம் படம், ஜுலை மாத இறுதியில் 411.89 கோடிகளை வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

     ஏமாற்றம் தந்த விக்ரம்

    ஏமாற்றம் தந்த விக்ரம்

    ஆனால் அதற்கு பிறகு எத்தனை கோடிகளை விக்ரம் படம் வசூல் செய்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் 75 நாட்களை கடந்து விட்டதால், விரைவில் 100 வது நாளை எட்டும், 500 கோடி கிளப்பில் இணையும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் விக்ரம் படத்தின வசூல் முடிவுக்கு வந்துள்ளது.

    முடிவுக்கு வந்த வசூல்

    முடிவுக்கு வந்த வசூல்

    இந்த நிலையில் விக்ரம் படம் ரிலீசாகி இன்றுடன் 88 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் 'விக்ரம்' படம் தூக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'விக்ரம்'படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் 432.50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் 307.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விக்ரம் மொத்த வசூல் விபரம்

    விக்ரம் மொத்த வசூல் விபரம்

    உலக அளவில் மிக அதிகமாக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ள 'விக்ரம்' படத்தின் ஏரியா வாரியாக வசூல் நிலவரங்கள் இதோ :

    தமிழகம் - ரூ.181.80 கோடி
    ஆந்திரா- தெலுங்கானா - ரூ.42.60 கோடி
    கர்நாடகா - ரூ.25.40 கோடி
    கேரளா - ரூ.40.50 கோடி
    வட இந்தியா - ரூ.17.30 கோடி

    இந்தியாவில் மொத்த வசூல் - ரூ.307.60 கோடி

    வட அமெரிக்கா - 3.35 மில்லியன் டாலர்
    மத்திய கிழக்கு நாடுகள் - 5.20 மில்லியன் டாலர்
    மலேசியா - 2.35 மில்லியன் டாலர்
    சிங்கப்பூர்- 0.95 மில்லியன் டாலர்
    ஆஸ்திரேலியா-நியூசிலாந்து - 0.85 மில்லியன் டாலர்
    பிரிட்டன் - 1.05 மில்லியன் டாலர்
    பிரான்ஸ் - 0.50 மில்லியன் டாலர்
    ஐரோப்பிய நாடுகள் - 1 மில்லியன் டாலர்
    உலகின் மற்ற நாடுகள் - 0.75 மில்லியன் டாலர்

    வெளிநாட்டு மொத்த வசூல் - 16 மில்லியன் டாலர் / ரூ.124.90 கோடி

    ஒட்டுமொத்த வசூல் ரூ.432.50 கோடி

    English summary
    The Lokesh Kangaraj-helmed action thriller led by Kamal Haasan also featuring Fahadh Fassil and Vijay Sethupathi in key roles collected a huge Rs. 432.50 crores worldwide, with Rs. 307.60 crores of that coming from India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X