»   »  என் கை சுத்தம்: விக்ரம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் என் வீட்டிலிருந்து எதையும் கைப்பற்றவில்லை என்று நடிகர்விக்ரம் விளக்கமளித்துள்ளார்.சமீபத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள்வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே சமயத்தில் நடந்த இந்த சோதனையின்போது ரூ. 30 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இதில் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டிலிருந்து மட்டும் ரூ. 6 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகைதிரிஷா வீட்டில் கணக்கில் வராத நகைகள் கிலோக்கணக்கில் சிக்கின. விவேக் வீட்டிலிருந்து ஒன்னேகால் கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சோதனை நடந்த நடிகர்களில் விக்ரம் ஒருவர். சோதனை குறித்து விக்ரம் கூறுகையில், வருமான வரித்துறைஅதிகாரிகள் மிகவும் நாகரீகமாகவும், நட்பாகவும நடந்து கொண்டனர்.எனது சம்பளம் உள்ளிட்டவை குறித்து பொதுவான கேள்விகளையே கேட்டனர். எனக்கு எந்தவிதநெருக்கடியையும், தொந்தரவையும் அவர்கள் கொடுக்கவில்லை. துன்புறுத்தவில்லை.எனது குழந்தைகள் வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல அனுமதித்தனர், எனது வங்கிக் கணக்குகள் குறித்துவிசாரித்தனர். அவை குறித்து விசாரிக்க எனது மனைவியுடன் ஒரே ஒரு பெண் அதிகாரி மட்டும் வங்கிக்குச்சென்று வந்தார். நான் முறையாக வருமான வரி செலுத்தியிருப்பதையும், கருப்புப் பணம், நகை என எதுவும் இல்லாததையும்பார்த்து வியந்து போனார்கள். எனது சட்டையில் அந்த சமயத்தில் 2000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதுவும்அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.அவர்கள் சோதனை நடத்திய போது அவர்களையே நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அதற்கானகாரணத்தை அவர்களிடமே கூறினேன். என்றாவது வருமான வரி அதிகாரி போல நடிக்க நேர்ந்தால் உங்களதுஸ்டைல் பயன்படுமே என்று நான் கூறியபோது அவர்கள் வாய் விட்டு சிரித்து விட்டார்கள்.எனது வீட்டில் கருப்புப் பணமோ, நகைகளோ, சொத்து ஆவணங்களோ எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லைஎன்று கூறியுள்ளார் விக்ரம்.

என் கை சுத்தம்: விக்ரம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் என் வீட்டிலிருந்து எதையும் கைப்பற்றவில்லை என்று நடிகர்விக்ரம் விளக்கமளித்துள்ளார்.சமீபத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள்வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே சமயத்தில் நடந்த இந்த சோதனையின்போது ரூ. 30 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.இதில் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டிலிருந்து மட்டும் ரூ. 6 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகைதிரிஷா வீட்டில் கணக்கில் வராத நகைகள் கிலோக்கணக்கில் சிக்கின. விவேக் வீட்டிலிருந்து ஒன்னேகால் கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சோதனை நடந்த நடிகர்களில் விக்ரம் ஒருவர். சோதனை குறித்து விக்ரம் கூறுகையில், வருமான வரித்துறைஅதிகாரிகள் மிகவும் நாகரீகமாகவும், நட்பாகவும நடந்து கொண்டனர்.எனது சம்பளம் உள்ளிட்டவை குறித்து பொதுவான கேள்விகளையே கேட்டனர். எனக்கு எந்தவிதநெருக்கடியையும், தொந்தரவையும் அவர்கள் கொடுக்கவில்லை. துன்புறுத்தவில்லை.எனது குழந்தைகள் வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல அனுமதித்தனர், எனது வங்கிக் கணக்குகள் குறித்துவிசாரித்தனர். அவை குறித்து விசாரிக்க எனது மனைவியுடன் ஒரே ஒரு பெண் அதிகாரி மட்டும் வங்கிக்குச்சென்று வந்தார். நான் முறையாக வருமான வரி செலுத்தியிருப்பதையும், கருப்புப் பணம், நகை என எதுவும் இல்லாததையும்பார்த்து வியந்து போனார்கள். எனது சட்டையில் அந்த சமயத்தில் 2000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதுவும்அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.அவர்கள் சோதனை நடத்திய போது அவர்களையே நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அதற்கானகாரணத்தை அவர்களிடமே கூறினேன். என்றாவது வருமான வரி அதிகாரி போல நடிக்க நேர்ந்தால் உங்களதுஸ்டைல் பயன்படுமே என்று நான் கூறியபோது அவர்கள் வாய் விட்டு சிரித்து விட்டார்கள்.எனது வீட்டில் கருப்புப் பணமோ, நகைகளோ, சொத்து ஆவணங்களோ எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லைஎன்று கூறியுள்ளார் விக்ரம்.

Subscribe to Oneindia Tamil

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் என் வீட்டிலிருந்து எதையும் கைப்பற்றவில்லை என்று நடிகர்விக்ரம் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் முன்னணி நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள்வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஒரே சமயத்தில் நடந்த இந்த சோதனையின்போது ரூ. 30 கோடி மதிப்பிலான பணம், நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டிலிருந்து மட்டும் ரூ. 6 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகைதிரிஷா வீட்டில் கணக்கில் வராத நகைகள் கிலோக்கணக்கில் சிக்கின. விவேக் வீட்டிலிருந்து ஒன்னேகால் கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை நடந்த நடிகர்களில் விக்ரம் ஒருவர். சோதனை குறித்து விக்ரம் கூறுகையில், வருமான வரித்துறைஅதிகாரிகள் மிகவும் நாகரீகமாகவும், நட்பாகவும நடந்து கொண்டனர்.

எனது சம்பளம் உள்ளிட்டவை குறித்து பொதுவான கேள்விகளையே கேட்டனர். எனக்கு எந்தவிதநெருக்கடியையும், தொந்தரவையும் அவர்கள் கொடுக்கவில்லை. துன்புறுத்தவில்லை.

எனது குழந்தைகள் வழக்கம் போல பள்ளிக்குச் செல்ல அனுமதித்தனர், எனது வங்கிக் கணக்குகள் குறித்துவிசாரித்தனர். அவை குறித்து விசாரிக்க எனது மனைவியுடன் ஒரே ஒரு பெண் அதிகாரி மட்டும் வங்கிக்குச்சென்று வந்தார்.


நான் முறையாக வருமான வரி செலுத்தியிருப்பதையும், கருப்புப் பணம், நகை என எதுவும் இல்லாததையும்பார்த்து வியந்து போனார்கள். எனது சட்டையில் அந்த சமயத்தில் 2000 ரூபாய் மட்டுமே இருந்தது. அதுவும்அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அவர்கள் சோதனை நடத்திய போது அவர்களையே நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அதற்கானகாரணத்தை அவர்களிடமே கூறினேன். என்றாவது வருமான வரி அதிகாரி போல நடிக்க நேர்ந்தால் உங்களதுஸ்டைல் பயன்படுமே என்று நான் கூறியபோது அவர்கள் வாய் விட்டு சிரித்து விட்டார்கள்.

எனது வீட்டில் கருப்புப் பணமோ, நகைகளோ, சொத்து ஆவணங்களோ எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லைஎன்று கூறியுள்ளார் விக்ரம்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil