Don't Miss!
- News
"புருஷன் சேஷரிங்.." தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
யாரும் திருப்பி அடிக்க மாட்டாங்கன்னு தைரியத்துல அடிச்சாரு அசீம்.. கொதித்தெழுந்த விக்ரமன், மைனா!
சென்னை: அமுதவாணனை அசீம் அடித்ததாக பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரளயமே வெடித்துள்ளது.
அசீம் தன்னை அடித்தது தவறு என அமுதவாணன் தொடர்ந்து அனைவரிடமும் சொல்லி வரும் நிலையில், அசீமுக்கு எதிராக ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் ஒன்று திரண்டு விட்டனர்.
தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி அசீமை எதிர்த்து கேள்வி கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அமுதவாணனை
அடித்த
மணிகண்டன்..
பிக்
பாஸ்
வீட்டில்
வெடித்தது
அடுத்த
சண்டை..
இந்த
வாரம்
களைகட்டுது!

அடித்த அசீம்
மற்றவர்களை போல இமிடேட் செய்வது, எதிர்த்து பேசுவது, சண்டைக்கு செல்வது என தொடர்ந்து மூர்க்கத்தனமான கேமையே இந்த வீட்டில் அசீம் விளையாடி வந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் அசீம் எல்லை மீறி சென்று அமுதவாணனை அடித்தே விட்டார் என அவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அமுதவாணன் கன்னத்தில் அசீம் கை வைத்ததை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அவ்வளவு மோசமா பிஹேவ் பண்ணக் கூடாது என கண்டித்து வருகின்றனர்.

திருப்பி அடிக்க மாட்டோங்கிற தைரியத்துல
அசீம் என்ன தான் செய்தாலும் 50 நாட்களாக அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டு விளையாடி வந்த ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரம் அசீமை டார்கெட் செய்து விட்டனர். அடிச்சா திருப்பி அடிக்க மாட்டோங்கிற தைரியத்துல தான் அசீம் அமுதவாணனை அடிச்சாரு என விக்ரமன் வச்சு விளாசி விட்டார்.

மைனா விளாசல்
அசீம் அதெப்படி நீங்க அவரோட கன்னத்தில் கை வச்சி அப்படி தள்ளலாம். அது அடிச்சதுக்கு சமம் தான் அசீம், நீங்க பண்ணது மிகப்பெரிய தப்பு முதல்ல அதை புரிஞ்சிக்கோங்க உங்க இஷ்டத்துக்கு பொய் பேசி இந்த கேமை விளையாடக் கூடாதுன்னு மைனா நந்தினியும் விளாசி எடுத்து விட்டார்.

மயக்கம் போட்ட அசீம்
இது ஒரு பக்கம் பெரிய பிரச்சனையை கிளப்பி வரும் நிலையில், திடீரென எழுந்து நடக்கும் போது அசீம் மயக்கம் போட்டு அப்படியே விழுந்ததும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் பதறிப் போய் மனிதாபிமானத்தோடு அவரை தூக்கி, தண்ணீர் தெளித்து காப்பாற்றிய காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களை நெகிழ வைத்தது.

தப்பிக்க டிராமா
அசீம் உண்மையாகவே மனம் உடைந்து போன நிலையில், மயக்கம் பட்டு கீழே விழுந்தாரா இல்லை இந்த வாரம் ரெட் கார்டு பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடைசி நேரத்தில் டிராமா போட்டாரா என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அசீமுக்கு உண்மையாகவே மயக்கம் ஏற்பட்டுத் தான் கீழே விழுந்தார் என்றூம் அவரை இந்த வாரம் இதற்காக வெளியே அனுப்பி விட்டால் ஷோவே போர் அடித்து விடும் என அசீமுக்கு ஆதரவான கருத்துக்களும் எழுந்துள்ளன.