விக்ரமன் ராக்.. கதிரவன் ஷாக்.. பிக்பாசிடம் பாராட்டு வாங்கிய விக்ரமன்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசனை நடத்திவருகிறது.
இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்களிலும் தொடர்ந்து தொகுப்பாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன்.
இந்த சீசனில் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதுமுகங்களாக இருந்தாலும் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே களைகட்டி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 9ம் தேதி பிரபம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கி தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி துவக்கம் முதலே அடுத்தடுத்த டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சிறப்பான ஜிபி முத்து
4 அணிகளாக பிரிந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது டான்ஸ், கேப்டன் உள்ளிட்ட டாஸ்க்குகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று தான் எந்த போட்டியாளருக்கும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் ஜிபி முத்து.

எதுவும் செய்யாத போட்டியாளர்கள்
சாதாரண யூடியூபராக அறியப்பட்ட இவர் அடுத்தடுத்த டாஸ்க்குகளில் வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்துள்ளார். நிகழ்ச்சியின் சில போட்டியாளர்கள் தாங்கள் எதற்காக நிகழ்ச்சிக்கு வந்தோம் என்பதையே அறியாமல் செயல்பட்டு வருகின்றனர். கடந்த வார இறுதியில் போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனும் இதுகுறித்து பேசினார்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி
இதனிடையே தனக்காக துவங்கப்பட்டுள்ள ஆர்மிக்களுடன் சிறப்பாக செய்லபட்டு வருகிறார். டான்ஸ் டாஸ்கில் ஏடிகேவுடன் மோதி அவர் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்று கலக்கி வருகின்றனர். விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக இந்த டாஸ்க் பார்க்கப்படுகிறது.

விக்ரமன் சிறப்பான ஆட்டம்
இதனிடையே இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரமோவில் விக்ரமன் மற்றும் கதிரவன் இருவரும் இணைந்து இந்த நடன டாஸ்கை மேற்கொள்கின்றனர். இதில் சூப்பராக குத்தாட்டம் போடும் விக்ரமன் இந்த டாஸ்கில் வெற்றிப் பெறுகிறார். இதையொட்டி ரசிகர்கள் விக்ரமனை பாராட்டி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

விக்ரமன் ராக்ஸ்
இந்த போட்டியில் விக்ரமன் ராக்ஸ் என்றும் கதிரவன் ஷாக்ஸ் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப கதிரவன், விக்ரமன் நடனத்துடன் போட்டி போட முடியாமல் ஆங்காங்கே ஷாக்குடன் தான் காணப்படுகிறார். இந்தப் போட்டியில் விக்ரமன்தான் வெற்றி பெறுகிறார். இவருக்கு சக போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் சூப்பர் கமெண்ட்ஸ்
பின்றான் யா விக்ரமன், சிங்கம் களத்துல இறங்கிடுச்சு, அவருடைய நம்பிக்கை சிறப்பாக இருந்ததாகவும் எதிர்பார்க்கவே இல்லை என்றும் மாஸ் என்றும் பலவிதமான கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த வாரத்திலிருந்து விக்ரமன் ஆட்டம் ஆரம்பம் என்றும் கூறியுள்ளன்ர்.

விமர்சனங்களுக்கு பதிலடி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமன் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த டான்ஸ் டாஸ்கில் தன்னை அவர் நிரூபித்துள்ளார். இதனிடையே அவரது நடனத்துக்கு பிக்பாசும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் அடுத்தடுத்த டாஸ்க்குகளில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











