ஐட்டம் சாங், கவர்ச்சி காட்டும் நமீதா... சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே... இயக்குநர் விக்ரமன் புலம்பல்!

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் எந்த காரணத்திற்காக ஓடும் என்பதை படம் எடுத்த இயக்குநர்களாலேயே கணிக்க முடியாது. அந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கும் கூட அந்தக் காரணம் தெரியாது. ஒரு சில படங்கள் தான் காலம் கடந்தும் ரசிக்கப்படுபவை. அப்படிப்பட்ட படம் தான் பிரியமான தோழி. ஆண் - பெண் நட்பை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த ஃபேவரைட் படமாக உள்ளது. ஆனால், இயக்குநர் விக்ரமன் கோபப்படும் அளவிற்கு இப்படத்தை ரீமேக் என்ற பெயரில் கன்னடத்தில் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்கேள என விக்ரமன் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

குடும்பங்களின் வெற்றி: விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யவம்சம், புதுவசந்தம், பிரியமான தோழி, பூவே உனக்காக, வானத்தைபோல, உன்னை நினைத்து ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக சூர்யவம்சம் திரைப்படத்தில் சரத்குமார், ராதிகா, மணிவண்ணன் என பலரும் பட்டையை கிளப்பிருப்பார்கள். இப்போதும் இப்படம் டிவியில் போட்டாலும் டிவி முன்பு ஆஜராகிவிடுவார்கள். குடும்பங்கள் வெற்றியை கொண்டாடிய படம். இப்படத்தின் இயக்குநர் விக்ரமனே இந்தப் படம் ஏன் ஹிட்டானது என்றும் தெரியாமல் ஓடியது என்றும் கூறியிருந்தார்.

vikraman namitha priyamana thozhi

பிரியமான தோழி: மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியமான தோழி. இப்படத்தின் தலைப்பிலேயே படத்தின் முழு கதையை விக்ரமன் சொல்லிவிட்டார். ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே காதல் என்று பேசும் பொதுவான கருத்தை உடைத்து திருமணத்திற்கு பின்பும் இருக்கும் நட்பை ஆழமாக சொல்லியிருப்பார். இப்படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படி ஒரு நட்பா என்று வியக்கும் அளவிற்கு விக்ரமனின் படைப்புகளை புகழ்ந்து பேசியவர்கள் ஏராளம்.

90ஸ் கிட்ஸ் இயக்குநர்: 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த இயக்குநர் விக்ரமன். காதல், நட்பு, குடும்பம் என வித்தியாசமான கதைக்களம் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது விக்ரமன் இயக்கிய பிரியமான தோழி படத்தின் கன்னட வெர்சனை பார்த்த அவர் அதிருப்தியடைந்தார். அட பாவிங்களா எப்படிப்பட்ட படம் இதை இப்படி பண்ணிட்டீங்களே என நொந்து போனார். பிரியமான தோழியில் நட்பு, காதலை தவிற வேறு எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், கன்னடத்தில் நமீதா ஹாட் சாங்கிற்கு ஆட்டம் போட்டிருப்பார். இதில், ஹைலட் என்னவென்றால் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா பாடலை கன்னட வெர்சனில் போட்டிருந்தனர்.

vikraman namitha priyamana thozhi

கடுப்பான விக்ரமன்: பிரியமான தோழி திரைப்படம் தெலுங்கில் வசந்தம் என ரீமேக் செய்யப்பட்டது. அதேபோன்று கன்னடத்தில் ஹூ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் ரவிச்சந்திரன், மீரா ஜாஸ்மீன், நமீதா நடித்திருந்தனர். எப்படிப்பட்ட படம் இதில், ஒரு காட்சி கூட ஆபாசமாக எடுக்க மனம் வரவில்லை எனக் கூறி மனம் நொந்து கொண்டார். எப்படித்தான் இப்படிப்பட்ட காட்சிகள் வைக்க தோன்றியதோ தெரியவில்லை என கூறினார். அதேபோன்று உன்னை நினைத்து படத்தையும் என்னிடமும், தயாரிப்பாளர்களிடமும் கேட்காமலேயே ரீமேக் செய்தனர். அப்படத்தை பார்த்து கன்னட திரைப்பட சங்கத்தில் கேஸ் போட்டு அதற்கான தொகையை வாங்கினேன்.

பாராட்டு: பிரியமான தோழி படம் பார்த்து திரை பிரபலங்களை தாண்டி அரசியல் தலைவர்களிடம் இருந்து எனக்கு பாராட்டு கிடைத்தது. குறிப்பா எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் என்னை பார்த்து சார் நீங்க எடுத்த படத்தில் மிகவும் பிடித்த படம் பிரியமான தோழி தான் என்று பாராட்டினார். அப்படியான படத்தை இப்படி கெடுத்துட்டாங்களேப்பா என இயக்குநர் விக்ரமன் நொந்து கொண்டார். இதுபோன்று மெகாஹிட் ஆன தமிழ் படங்களின் பர்னிச்சர்களை கன்னட படங்கள் உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X