Don't Miss!
- News
மாட்டிறைச்சி.. மின்கம்பத்தில் கட்டிவைத்து அசாம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. பரபர கர்நாடகா.. ஷாக்
- Sports
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. 22வது முறையாக கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்.. நடால் சாதனை சமன்
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
போராடி கிடைத்த வெற்றி..பிக் பாஸ் வீட்டில் ஒலித்த “ஜெய்பீம்“..போராட்டம் எங்களுக்கு புதுசுஇல்லை!
சென்னை : விஜய் தொலைக்காட்சியில் விக்ரமன், அம்பேத்கருக்கு கடிதம் எழுதி படித்தது ஓளிபரப்பப்படாதது சர்ச்சைக்குள்ளான நிலையில், நேற்று ஒரு மணி நேர எபிசோடில் விஜய் டிவி அதை ஒளிபரப்பி உள்ளது.
கடந்த ஆக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
இது வரை எந்த சீசனில் இல்லாத வகையில் இந்த சீசனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விக்ரமன் பங்கேற்று வருகிறார்.
அம்பேத்கருக்கு கடிதம் எழுதிய விக்ரமன்..புறக்கணித்த விஜய் டிவி..விளாசும் நெட்டிசன்ஸ்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறதற்காக போட்டியாளர்கள் இரண்டு டீமாக பிரிந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக இருந்தனர். இதில், அசீம், தனலட்சுமிக்கு லவ் லெட்டர் கொடுத்ததும், அவரை துரத்தி துரத்தி வம்பு இழுத்ததும் ரசிக்கும்படி இருந்தது. இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராக அசீம் இருப்பார் என்று ரசிகர்கள் இப்போதே யூகித்து வைத்துவிட்டனர். இதையடுத்து, நேற்றில் இருந்து 80ஸ் கல்லூரியாக பிக் பாஸ் வீடு மாறி உள்ளது.

அம்பேத்கருக்கு கடிதம்
பிக் பாஸ் வீட்டில் கடித டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரை நினைத்து கண்ணீர் மல்க பேசினார்கள். ஆனால், விக்ரமன் சட்டமேதை அம்பேத்கரை நினைத்து உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அனைத்து போட்டியாளர்கள் கடிதம் வாசித்தது 24 மணி நேரலையிலும், விஜய் டிவியிலும் ஒளிபரப்பான நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி படித்தது 24 மணி நேர ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவில்லை.

விக்ரமனுக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
இதனால் சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. அனைவருக்கும் வழங்கப்பட்ட வாய்ப்பு விக்ரமனுக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என கேள்வியை நெட்டிசன்கள் இணையத்தில் கேட்டனர். இணையத்தில் கண்டனங்கள் வலுத்ததால், நேற்று விஜய் டிவியில் விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி வாசித்ததை ஒளிபரப்பியது.

ஜெய் பீம்
இதனால் , மகிழ்ச்சி அடைந்த ஒரு நெட்டிசன்ஸ், இறுதியாக வெற்றி பெற்று விட்டோம், அம்பேத்கர் பற்றி விக்ரமன் எழுதிய அன்பு கடிதம் 1மணி நேரம் நிகழ்வில் காட்டப்பட்டது உள்ளது 24 மணி நேர நிகழ்வில் தவிர்க்க நினைத்ததை 1 மணி நேரத்தில் வரவைத்து ஜனநாயகத்தின் வெற்றி என்றும், எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கு என்றும், போராட்டம் நமக்கு புதுசில்லையே ஜெய் பீம் என்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.