விஜய் பெரிய 'மாஸ் ஹீரோ' ஆவார்னு நான் அப்பவே சொன்னேன், யாருமே நம்பல: விக்ரமன்
சென்னை: விஜய் மாஸ் ஹீரோவாக ஆவார் என்று நான் கூறியபோது யாருமே என்னை நம்பவில்லை என்று இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
குடும்ப படங்கள் எடுக்க பெயர் போனவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கியுள்ள நினைத்தது யாரோ படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் புதுமுகங்களான ரெஜித் மற்றும் நிமிஷா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து விக்ரமன் கூறுகையில்,

விஜய், ஜோ
நினைத்தது யாரோ ரெஜித் மற்றும் நிமிஷா விஜய், ஜோதிகா போன்று விரைவில் பிரபலம் ஆவார்கள் என்று விக்ரமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாஸ் ஹீரோ
நான் விஜய்யை வைத்து பூவே உனக்காக படம் பண்ணியபோது அவர் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக வருவார் என்றேு கூறினேன். ஆனால் அப்போது யாருமே என்னை நம்பவில்லை. நான் கூறியது நடந்தது என்றார் விக்ரமன்.

ரெஜித்
நான் நினைத்தது யாரோ படத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ள புதுமுகங்கள் அருமையாக நடித்துள்ளனர். ரெஜித் ஒருநாள் விஜய் போன்று பெரிய ஸ்டாராக வருவார். நிமிஷா ஜோதிகா போன்று பிரபலமாவார். அவருக்கு நல்ல தமிழில் பேசவும் தெரியும் என்று விக்ரமன் தெரிவித்தார்.

பூவே உனக்காக
விஜய்க்கு பல ரசிகைகள் கிடைக்க காரணமாக இருந்த படம் பூவே உனக்காக. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்த படம் இது என்று கூட கூறலாம்.


Click it and Unblock the Notifications











