ராமராஜன் சாமானியன் வசூலை கூட முந்தாத விக்ரமன் மகன் படம்.. ஹிட் லிஸ்ட் முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

சென்னை: புதுவசந்தம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்ரமன். இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக புதிய பாதை படத்தில் பணியாற்றிய விக்ரமன் தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தார்.

புதுவசந்தம் திரைப்படம் தமிழ்நாட்டின் சிறந்த படத்துக்கான விருதை வென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதையும் அந்தப் படத்துக்காக விக்ரமன் வென்றார். அந்தப் படத்தை தொடர்ந்து பெரும்புள்ளி, கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூர்யவம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி என பல வெற்றி படங்களை விக்ரமன் இயக்கியுள்ளார்.

Box Office Hit List Vijay Kanishka Vikraman Ramarajan

அவரது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் நேற்று ஹிட் லிஸ்ட் திரைப்படம் வெளியானது. விஜய் கனிஷ்காவின் அறிமுகப்படம் அவருக்கு வசூல் ரீதியாக வெற்றி படமாக மாறியதா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

கண்ணீர் விட்ட விக்ரமன்: பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த நிலையில், ஹிட் லிஸ்ட் படம் வெற்றி பெற வேண்டும் என நினைத்து மக்கள் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கண்ணீர் சிந்தினார்.

கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பு: பிரபல இயக்குநரான கே.எஸ். ரவிக்குமார் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக இந்த படத்தை தயாரித்துள்ளார். அவரது உதவி இயக்குனர் தானே சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் இந்தப் படத்தை இணைந்து இயக்கினர். சரத்குமார், கௌதம் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, அபி நக்‌ஷத்ரா, சித்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்கள்: ஹிட் லிஸ்ட் திரைப்படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்து விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இணைந்து புரமோஷன் செய்தனர். ஆனால், நேற்று வெளியான ஹிட் லிஸ்ட் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் அந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். சூரியின் கருடன் திரைப்படம் அளவுக்கு இந்த படம் இல்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் நாள் வசூல்: விக்ரமின் மகனாக இருந்தாலும் அறிமுக நடிகரான விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் மட்டுமே இந்த படம் வசூல் செய்தது. ராமராஜன் நடிப்பில் வெளியான சாமானியன் திரைப்படம் முதல் நாளில் 25 லட்சம் வசூல் செய்த நிலையில், அதைவிட விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படம் குறைவான வசூலை பெற்றுள்ளது. கிளைமேக்ஸ் வரை மாஸ்க் மேன் யாரு என ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருந்தாலும் படத்தை ரசிகர்கள் பார்க்க தயாராக இல்லை என்றே தெரிகிறது.

சொதப்பும் கே.எஸ். ரவிக்குமார் படங்கள்: இதற்கு முன்னதாக பிக் பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடித்த கூகுள் குட்டப்பன் படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்க அவரது உதவி இயக்குநர்கள் அந்த படத்தை இயக்கினர். ஆனால், அந்த படமும் வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், ஹிட் லிஸ்ட் படமும் நடிகர்களின் சம்பளத்துக்கு கூட வசூல் வராது என்று தான் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X