twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் சங்கத் தலைவராக விக்ரமன் தேர்வு

    By Mayura Akilan
    |

    Vikraman wins the Tamil Nadu Director’s Association Election
    சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் இயக்குநர் விசுவை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.

    தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதேபோல் தற்போது பாரதிராஜா தலைமையில் உள்ள இயக்குனர் சங்கத்தின் காலம் முடிந்து விட்டது.

    இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான இயக்குனர் சங்க தேர்தல் நேற்று காலை 8 மணிக்கு சென்னை, வடபழனியில் உள்ள தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்கத்தில் தொடங்கியது. இதில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விக்ரமன், விசு அணிகள் போட்டியிட்டன.

    அதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணியும், ஆர்.சுந்தர்ராஜனும் களத்தில் இறங்கினர். புதிய அலைகள் என்ற பெயரில் உதவி இயக்குனர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் நேற்று மாலை 5 மணி வரை நடந்தது.

    விக்ரமன் வெற்றி

    இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தம் 1,289 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதில் 13 வாக்குகள் மட்டும் செல்லாதவை எனவும் தெரிவிக்கப்பட்டது.

    வாக்கு எண்ணிக்கையில் 717 வாக்குகள் பெற்று இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட விசுவுக்கு 562 வாக்குகள் கிடைத்திருக்கிறது.

    மீதமுள்ள பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற 20 பணியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

    English summary
    Director Vikraman has won the election for the President of Tamil Nadu Film Directors’ Association which was held on Sunday (9 June 2013). For the post of President, veteran director Visu and Vikraman were pitted against each other. Vikraman won by a margin of 160 votes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X